தலைப்புச் செய்திகள் …(20-12-2023)

*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது …மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் இருவரும்ட உடனே சிறை செல்ல நேரிடும் என்பதால் பெரும் பரபரப்பு.

*குற்றவாளி என்று நேற்று தீர்ப்புக் கூறப்பட்ட போதே பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகிவிட்டதாக சட்ட நிபுணர்கள் கருத்து .. குற்றவாளி என்பதற்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக தடை விதித்தால் மட்டுமே அவா் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியில் தொடர முடியும் என்றும் விளக்கம்.

*தமிழ் நாட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பதவி இழக்கும் மூன்றாவது அரசியல்வாதி பொன்முடி ஆவார் .. சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே ஜெயலலிதா , ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பதவி இழந்து உள்ளனர்.

*கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைமை சீரடையாததால் பல இடங்களில் இன்னும் மின் வினியோகம் நடைபெறவில்லை …போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை சரி செய்து மின்சாரம் கொடுக்க நடவடிக்கை .

*தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மற்ற இடங்களை விட கடுமையான சேதம் … பல இடங்களை வெள்ளம் அரித்துவிட்டதால் போக்குவரத்தை தொடங்க முடியாத நிலை.

*மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.. , மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்

*மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையி்ல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 10 ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம் செய்வதாகவும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேட்டி.

*தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை .. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.

*திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பியது ..ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டதாக தகவல்.

*கடந்த மூன்று நாட்களாக துண்டிக்கப்பட்டு இருந்த நெல்லை -தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியது … கிராமப்புற சாலைகளையும் சீரமைத்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல்.

*நெல்லை மாவட்டத்தில் வெள்ளச்சேதம் குறித்த கணக்கெடுப்புகள் ஊர் வாரியாக தொடங்கப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகயேன் அறிவிப்பு … பொதுமக்கள் தங்கள் சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தல்.

*தண்ணீரால் சூழப்பட்டு இருந்த திருநெல்வேலி ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து ஆரம்பம் ..மதுரையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து நாகர் கோயிலுக்கும் ரயில்கள் ஒடத்தொடங்கியது.

*தூத்துக்குடி அருகே ஏரலில் உள்ள வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு.. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மூலம் மீட்கப்பட்ட அமைச்சர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் அவரையும் வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் பட்டியலில் சேர்த்தது எப்படி ? அண்ணாமலை கேள்வி.

*சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு விமானப் போக்கு வரத்து தொடங்கியது …கன மழையால் ஞாயிறு,திங்கள்,செவ்வாய் ஆகிய நாட்களில் விமான சேவை நடைபெறவில்லை.

*திரு வைகுண்டத்தில் வெள்ளத்தி்ல் சிக்கிக்கொண்ட ரயிலில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அனுசுயாவுக்கு மதுரைமருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது… மீட்புக் காட்சி வலைதளங்களில தொடர்ந்து வைரல்.

*அவணியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் மதுரை மாநாகராட்சியும் இணைந்து நடத்த உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு … இதுவரை தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட போட்டியில் சாதி பாகுபாடு இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு.

*நீர் வழிப்படும் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகடமி விருது அறிவிப்பு … ஏழை மக்களின் வாழ்வியலையும் தனி மனிதனின் வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறது நீர் வழிப்படும் நாவல்.

*சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் .. விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கும் மற்ற நாட்களில் மதியம் 2 மணிக்கும் தொடங்கி இரவு 8. 30 மணி வரை நடைபெறும் என்று அறிவிப்பு,

*குரூப் -4 தேர்வுக்காக ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் .. குரூப்-2 மற்றும் -2 ஏ வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டில் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிப்பு

*அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் தலைவர் பன்னுவம் என்பவரை வேறு ஒருவர் மூலம் இந்திய உளவு அமைப்பு கொல்ல முயன்றதாக கூறப்படும் புகாருக்கு பிரதமர் மோடி பதில் .. இந்தியர் ஒருவர் சம்மந்தப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம்.

*இந்திய -அமெரிக்கா இடையிலான உறவு ஒரு சில தவறான கருத்துகளால் தடம் புரண்டு விடாது .. பிரிட்டன் நாட்டின் பைனான்சியல் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மோடி உறுதி.

*நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்க, அதுவும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்க பிரதமருக்கு நான்கு நாட்களாகி இருப்பது வேதனைக்கு உரியது … டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு.

*நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை மறுதினம் போராட்டம் .. இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் அறிவிப்பு.

*நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று திரினாமுல் எம்.பி ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தன்கர் போன்று நடித்துக் காட்டிய செயல் சர்ச்சை ஆனது .. தன்கைரை நேரில் சந்தித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆதரவு தெரிவிப்பு.

*நாடாளுமன்ற வளாகத்தி்ல் குடியரசு துணைத்தலைவர் அவமதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக குடியரசுத் தலைவர் முர்மு கருத்து .. தன்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிப்பு.

*முக்கியமான மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது .. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்ட மசோதாக்ககளை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார் உள்துறை அமைச்சர் அமி்த்ஷா.

*ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹெனியாக் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக எகிப்து தலைநகரம் கெய்ரோவுக்கு வந்து சேர்ந்தார் ..காசா முனை மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அப்பாவி மக்கள் மடிவதை தடுக்க நடவடிக்கை.

*’அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடை பெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் கொலோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் போட்டியிட தடைவிதித்து அந்த மாகாண உச்சநீதிமன்றம் தீர்ப்பு .. கடந்த 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த பிறகு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.

*விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரி விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் …கிரிக்கெட் வீரர் முகமது ஷமி , தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைசாலி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜுனா விருது .

*மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார் சனி பகாவான் … காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *