*நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராடுவது, குலக்கல்வி முறையை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்பது உட்பட 25 தீர்மானங்கள் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றம்… கல்வி மற்றும் மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பது மற்ற முக்கிய தீர்மானங்கள்.
*மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள வாக்களிக்கப் போவதில்லை … இந்தியா முழுமையும் விரைவில் விடியல் பிறக்கும் என்று சேலம் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு.
*திமுக இளைஞரணி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, கார்கே வாழ்த்து … சரத்பாபு, சீதாராம் எச்சூரி, நவீன் பட்நாயக், பினராய் விஜயன், சித்தராமய்யா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் மாநாடு வெற்றிப் பெற வாழ்த்துச் செய்தி.
*ராமேஸ்வரத்தில் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி.அரிச்சல் முனை கடற்கரையில் வண்ணப் பூக்களை தூவி வழிபாடு… கோதண்ட ராமர் ே கோயிலிலும் பிரார்த்தனை..
*தமிழ்நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்த மோடி ராமேஷ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை பயணம் … மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
*பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நாளை மதியம் 12 மணி அளவில் நடைபெறுவதால் பிரமாண்ட ஏற்பாடுகள் …. பிரதமர், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் என மிக முக்கிய பிரமுகர்கள் வருவதால் அயோத்தியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு.
*ராமார் கோயில் குட முழுக்கை தொலைக் காட்சகிளில் காண்பதற்காக நாளை மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு.. உ.பி. , இமாச்சல் உட்பட பல மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிப்பு.
*நாங்கள் பக்தியையும் மதத்தையும் விளம்பரத்திற்காக பயன்படுத்துவதில்லை, பிரார்த்தனைகளை மட்டும் நம்புகிறோம் … கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அயோத்தி ராமர் கோயில் குட முழுக்கை முன்னிட்டு விடுமுறை விட வேண்டும் என்று வற்புறுத்திய பாஜகவுக்கு பதில்
*அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு … முக்கியமான அறுவை சிகிச்சைகள் எதுவும் நாளை திட்டமிடப்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தந்த விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்துவைப்பு.
*தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை… உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
*அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக நிர்வாககிள் கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் பங்கேற்பு … மதுராந்தகம் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கோயிலை சுத்தம் செய்தார்
*இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு .. விசாரணையில் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்பது உறுதியானது.
*பாரத நியாய பயணத்தில் பங்கேற்க கூடாது என்று பொதுமக்களை அசாம் மாநில பாஜக அரசு மிரட்டுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு .. இரண்டு தினம் முன்பு ராகுல் தமது பேச்சில், இந்தியாவில் அதிக ஊழல் நடைபெறும் அரசு அசாம் மாநில அரசு என்று விமர்சனம் செய்திருந்தார் ராகுல்.
*சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில் நடை அடைப்பு…. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி 13-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு.
*இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவான நிலநடுக்கம்… பிரேசில் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
*பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு … பாலஸ்தீனம் உருவானால் இஸ்ரேலின் இறையாண்மையை பாதிக்கும் என்று கருத்து.
*ரஷ்யா கைப்பற்றி வைத்து உள்ள டொனஸ்க் நகரத்தின் மீது உக்ரைன் படைகள் குண்டுவீசி தாக்குதல் … பொது மக்கள் உயிரிழந்த பரிதாபம்.
*நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வேல.ராமமூர்த்தி எழுதிய பட்டத்து யானை என்ற நாவலை திருடி எடுக்கப்பட்டதாக புகார் … ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடி படம் எடுப்பது வேதனை அளிப்பாதாக வேல. ராமமூர்த்தி கருத்து.
*ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு பயன்படுத்திய கைக்கடிகாரம் ரூ 2 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனது …மாசு கட்டுபாட்டுப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக கடிகாரத்தை ஏலம் விட்டார் அர்னால்டு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447