*டெல்லியை நோக்கி டிராக்டரில் முன்னேறிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு .. பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் பதற்றமான சூழல். போராட்டக் களத்தில் விவசாயி உயிரிழப்பு.
*விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலையில் முள்கம்பி வேலிகள், தரையில்ஆணிகள், இரும்பு தடுப்புகள் என்று போலீஸ் தீவிர நடவடிக்கை.. மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவருமாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்தய அரசு அழைப்பு.
*ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போகக் கூடாது என்பதுதான் அதிமுகவின் நோக்கம் என்று மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி .. அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் என்றும் கருத்து.
*மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது மார்ச் 1-ஆம் தேதிக்குள் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.
*பிரதமர் மோடி இந்த மாதம் 28- ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியபின் நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் … பிரமாண்டமான கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக நிர்வாகிகள் தீவிரம்.
*சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் நினைவிடத்தை 26- ஆம் தேதி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இரண்டே கால் ஏக்கர் பரப்பில் ரூ 39 கோடி செலிவில் உருவாக்கப்பட்டு உள்ளது நினைவிடம்.
*மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து கமல் ஹாசன் பேச்சு … விவசாயிகளுக்கு மாநில அரசு செய்த அளவு கூட மத்திய அரசு செய்யவில்லை என்று புகார்.
*சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப் பெருந்தகை பதவி ஏற்பு … விழாவில் ப.சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்பு.
*நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கணக்குத் தொடக்கம் … முக்கியமான தகவல்கள் நான்கு சமூக ஊடகங்கள் வழியாக அனைவரையும் சென்றடையும் எனறு விளக்கம்.
*சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை 16.07 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்…. கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கேட்டு தயாரிப்பு.
*சென்னை அடுத்த கூவத்தூரி்ல் கடந்த 2017- ஆம் ஆண்டு அதிமுக எம்.எல்.எ.க்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த நிகழ்வுடன் திரிஷா உள்ளிட்ட நடிகைகளை தொடர்பு படுத்த பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் … அதிமுக தலைமை நடவடிக்கை
*திரைத் துறையினரும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியீடு… தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் நடிகை திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அறிவிப்பு.
*சென்னையி்ல் 200 வட்டங்களி்லும் பெண்களுக்கு தனி உடற்பயி்ற்சிக் கூடம் ரூ 10 கோடி செவில் அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் உரையில் மேயர் பிரியா அறிவிப்பு …. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கேமிரா பொருத்தவும் நிதி ஒதுக்கீடு.
*காவல் துறை முன்னாள் டி.ஜி.பி.க்கள் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ 10 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வேலைக்கு ஒருவரை நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி … ஏற்கனவே ஓய்வு பெற்ற ஐஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் நீட்டிப்பு.
*சோழிங்க நல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. கந்தன் மீது மருமகள் சுருதி போலீசில் புகார்.. திருமணத்தின் போது வர தட்சணையாக 600 சவரன் நகைகள் போட்ட நிலையில் மேலும் 400 சவரன் நகை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு.
*தருமபுரியில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதாக சர்ச்சை … நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிகுமார் மீது நடவடிக்கை.
*ஜெர்மனி நாட்டின் லூப்தான்சா விமான நிறுவன ஊழியர்கள் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தம்… சென்னையில இருந்து பிராங்பர்ட் நகரத்துக்கு இயக்கப்படும் விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலில் உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக தகவல்… மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிய சமாஜ்வாதி 62 தொகுதிகளில் போட்டியிட முடிவு. ஒரு இடத்தை சிறிய கட்சி ஒன்றுக்கு கொடுப்பதாக திட்டம்.
*சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள தொகுதி பங்கீட்டு திட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை … தங்களுக்கு 21 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதாக தகவல்.
*பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன்(95) காலமானார் … பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் ஃபாலி நாரிமன் மிக முக்கியமான வழக்குகளில் ஆஜராகி வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்புகளை பெற்றவர்.
*மேற்குவங்க விலங்கியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என்று பெயரிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை .. சிங்கத்திற்கு சீதா எனப் பெயர் இருப்பதால் என்ன பிரச்சினை என்று நீதிபதி கேள்வி. கடவுளாக வணங்கப்படும் சீதா கோயிலில் இருக்க வேண்டும், காட்டில் அல்ல என்று மனுதாரர் பதில்.
*பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் நவாஷ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது .. நவாஷ் ஷெரீப்பின் தம்பி சபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்பது, பிலாவல் பூட்டோவின் தந்தை சர்தாரியை அதிபர் பதவியில் அமர்த்துவது என்றும் முடிவு.
*காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டே அதிகாரத்தால் ரத்து செய்ததற்கு சீனா கடுமையான கண்டனம் … அமெரிக்காவின் செயல் காசாவில் நடைபெறும் படுகொலைகளை ஆதரிப்பதாக உள்ளது என்று விமர்சனம்.
*திரை அரங்குகளில் வெளியான எட்டு வாரம் கழித்துதான் படங்களை ஓ,டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று சென்னையில நடைபெற்ற திரை அரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் … கிரிக்கெட், கால் பந்து போன்ற விளையாட்டுகளை திரை அரங்குகளில் ஒளிபரப்ப அனுமதிக்குமாறும் வலியுறுத்தல்.
*இங்கிலாந்து உடன் ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் போட்டி ஆட உள்ள இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, கே.எஸ். ராகுல் விலகி உள்ளதா பிசிசிஐ அறிவிப்பு … பும்ராவுக்குப் பதில் முகேஷ் குமார் சேர்ப்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447