தலைப்புச் செய்திகள் (21-08-2023)

*காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் .. மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உடனே அமைப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு.

*சந்திராயன் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு 4 படங்களை அனுப்பி வைத்தது.. லேண்டர் அனுப்பிய படங்களை ஆய்வு செய்து தரையிறங்க வேண்டிய இடத்தை முடிவு செய்வதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

*நிலவை ஏற்கனவே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திராயன்- 2 ஆர்ப்பிட்டருக்கும் சந்திராயன் -3 ன் லேண்டருக்கும் தொலை தொடர்பு கிடைத்தது .. சந்திராயன்- 3 ஐ தொடர்பு கொள்வதற்கு புதிய வசதி கிடைத்துவிட்டதால் இஸ்ரோ மகிழ்ச்சி.

*ஜப்பான் நிதி உதவியுடன் சென்னை அடுத்து பேரூரில் கடல் நீரை குடி நீராக்கும் நிலையம் .. காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்.

*சென்னை வேளச்சேரியில் கல்லூரி மாணவர்கள் வெடிகுண்டு வீசித் தாக்கிக்கொண்டது தமிழ் நாட்டிற்கு தலை குனிவு .. வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*வேளச்சேரி வெடிகுண்டு வீச்சு சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காட்டுவதாக அண்ணாமலை புகார்.. தமிழ்நாட்டில் கஞ்சாவும் வெடிகுண்டும் தாரளமாக புழங்குவதாக அறிக்கை.

*சென்னை கல்லூரி மாணவர்கள் வீசிக்கொண்டது வெடிகுண்டு அல்ல என்று காவல் துறை விளக்கம் .. சவ ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் பட்டாசை காகிதத்தில் சுற்றி வீசியதாக தகவல்.

*தமிழ்நாட்டில் முக அடையாளத்தைப் பயன்டுபடுத்தி குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு எதிராக வழக்கு.. காவல் துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

*மேட்டூர் அணை இன்று 90- வது ஆண்டை கொண்டாடும் நிலையில் அணையை பாலை வனமாக்க முயற்சிக்கிறது கர்நாடகம் … மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க ஓட்டுமொத்த தமிழகமும் இணைந்து போராட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கருத்து.

*மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் நேரில் ஆஜராகி வருத்தம் … மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்திக் காட்டுவது சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதாக உயர்நீதிமன்றம் கருத்து.

*தமிழகத்தில் மூன்று கோடியே முப்பது லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை ஒரே நேரத்தில் வாங்குவதற்கு டெண்டர் கேட்டது மின்வாரியம் .. வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டம்.

*மதுரை அதிமுக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்புகையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்த எட்டு் பேர் குடும்பத்திற்கும் தலா ஆறு லட்சம் ரூபாய் உதவித் தொகை .. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமது ஆதரவு நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை.. செப்டம்பர் 3- ஆம் தேதி காஞ்சிரபுரத்தில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய ஓ.பி.எஸ்.திட்டம்.

*டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் அனைவருக்கும் தெரியும் படி இருக்கிறதா என்பதை மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்யவேண்டும் .. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*தமிழ் நாடு அரசு யூகங்கள் அடிப்படையில் ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளதால் தடை விதிக்குமாறு சூதாட்ட நிறுவனங்கள் வலியுறுத்தல் .. இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.

*நடிகர் ரஜினி காந்த், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் காலில் விழுந்து வணங்கியது பற்றி தொல்.திருமாவளவன் விமர்சனம்.. மறைந்து இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டதாக கருத்து.

*தாம்பரம் அருகே இரு சக்கர வாகனம் நிலை சாய்ந்ததில் கீழே விழுந்த ஐந்தாம் வகுப்பு மாணவி லாரி மோதியதில் இறப்பு .. இரு சக்கர வாகனத்தை ஓட்டிய தாய் காயங்களுடன் தப்பினார்.

*கடந்த 2014 – ஆம் ஆண்டில் தனி நபரின் சராசாரி ஆண்டு வருமானம் ரூ 4 லட்சமாக இருந்தது இப்போது ரூ 13 லட்சமாக உயர்ந்து உள்ளது ..பிரதமர் மோடி தகவல்.

*தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 119 தொகுதிகளுக்கும் பி.ஆர்.எஸ்.கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு .. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு.

*விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய முதல் புகைப்படம் என்று டீ ஆற்றும் படத்தை வலை தளத்தில் பதிவிட்டதால் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு .. இந்திய விஞ்ஞானிகளை களங்கம் செய்துவிட்டதாக வலை தளங்களில் கண்டனம்.

*18 வயதுக்கும் உட்பட்ட சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லியில் மாநில அரசு அதிகாரி பிரமோடி காகா என்பவர் கைது .. சிறுமியின் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு மருந்து கொடுத்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து விசாரனை.

*நெல்லை பாளையங்கோட்டையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு .. ஆகஸ்டு மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை என்று பொதுமக்கள் கருத்து.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *