*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை … தலா ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு.
*மேல் முறையீடு செய்வதற்காக சிறைத் தண்டனையை 30 நாட்கள் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி, விசாலாட்சி இருவரும் உடனடியாக சிறை செல்லவில்லை … மேல் முறையீட்டை ஏற்று உச்ச நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை கொடுக்காவிட்டால் 30 நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் பொன்முடி சிறை செல்ல நேரிடும்.
*சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி தமது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை உடனடியாக இழந்தார்.. பொன்முடி வெற்றிப் பெற்ற திருக்கோவிலூர் தொகுதியை வெற்றிடமாக ஒரு வாரத்தில் அறிவிக் க நடவடிக்கை.. நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு.
*தீர்ப்பை சொல்லி முடிக்கும் வரை நீதிபதி முன் கையெடுத்து கும்பிட்டபடி நின்றார்கள் பொன்முடியும் அவரது மனைவியும் .. சிறை தண்டனை பற்றிய அறிவிப்பைக் கேட்டதும் மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு அழுகை.
*கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த போது வருமானத்தை மீறி ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்தார்கள் என்பது பொன்முடி மற்றும் அவருடைய மனைவி மீது வழக்கு … கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் 2016 -ல் விடுவிக்கப்பட்டாலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல் முறையீட்டை விசாரித்து இன்று தண்டனை வழங்கியது உயர்நீதிமன்றம்.
*தமிழ் நாட்டில் வழக்கில் சிக்கி பதவியை இழக்கும் மூன்றாவது அரசியல்வாதி பொன்முடி … சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் கலவர வழக்கில் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டியும் இதற்கு முன் பதவியை இழந்தவர்கள் ஆவர்.
*பொன்முடி உட்பட இரண்டு அமைச்சர்கள் சிறைக்கு சென்று உள்ள நிலையில் இன்னும் எத்தனை அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு எடப்பாடி பழனிசாமி கருத்து … நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
*கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்த பொன்முடி பேராசிரியராக பணி செய்தவர் .. திராவிடர் கழக பேச்சாளராக விளங்கிய பொன்முடி 1989-ல் திமுக சார்பில் வெற்றிப்பெற்று முதன் முறையாக அமைச்சர் ஆனார்.
*தற்போது 73 வயதாகும் பொன்முடி நான்கு வருட சிறைத்தண்டனை உறுதியாகி அனுபவித்தாலும் அதன் பிறகு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது … பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி இப்போது கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொரு மகன் மருத்துவர்.
*பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை இலாகா அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு … ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நல இலாகாவை கவனிக்கும் கண்ணப்பன் கூடுதலாக உயர் கல்வித்துறை இலாகாவையும் கவனிப்பார் என்று அறிவிப்பு,
*கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு .. இலாகா மாற்றங்கள் தொடர்பான முதலமைச்சர் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்.
*உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார் பொன்முடி. … தீர்ப்பின் நகல் கிடைத்ததும், வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்.
*பொன்முடி மீதான வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ பேட்டி … குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யப்படாததை முன் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கருத்து.
*ஏற்கனவே சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் மற்றொரு அமைச்சர் பொன்முடி, இணைகிறார்…. திமுக அமைச்சர்களுக்கு எதிரான மற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என்று அண்ணாமலை கருத்து.
*மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு . .. அந்தோணியார் புரம் உட்பட பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர்.
*கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் .. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு.
*நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 6 ஆயிரம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு ..தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் தலா ரூ ஆயிரம் தரப்படும் என்றும் அறிவிப்பு.
*பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ 17 ஆயிரம் தரப்படும் … பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கான இழப்பீடு பத்தாயிரமாக உயர்த்தி தரவும் முதலமைச்சர் உத்தரவு.
*வானிலை மையம் கன மழை பெய்யும் என்று தெரிவித்த உடன் முன் எச்சரிக்கை நடவடிக்ககைளை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் சேதங்களை தவிர்த்து இருக்கலாம் … பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி காவேரிபட்டினத்தில் அளித்த பேட்டியில் விமர்சனம்.
*தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் , திரு வைகுண்டம் , ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில 50 கிராமங்களில் ஐந்து நாளாகியும் தண்ணீர் வடியவில்லை ஏராளமான உப்பளங்களிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் உப்பு உற்பத்தி பாதிப்பு.
*தூத்துக்குடி – மணியாச்சி இடையே மூன்று நாட்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது .. தூத்துக்குடி -மைசூர் எக்ஸ்பிரஸ் முதல் ரயிலாக இயக்கம்.
*நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டிருந்தது … சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
*திருநெல்வேலி மாவட்டத்தில் கொக்கிரக்குளம், தாமிரபரணி ஆற்று ஓரம் உட்பட வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் மத்தியக் குழு ஆய்வு … மாவட்ட ஆடசித் தலைவர் அலுவலகத்தி்ல் அதிகாரிகளை சந்திதது சேதம் பற்றிய விவரங்களும் சேகரிப்பு.
*சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்களிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு பெண் தலைமை காவலர் பிரபாவதி கைது … புரோக்கராக செயல்பட்டவரையும் வளைத்தது போலீஸ்.
*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதி ,, 75 – வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து.
*கோயம்புத்தூரில் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் கர்நாடக மாநில போலீ்ஸ் சோதனை … கர்நாடக மாநிலத்தில் பொங்கலூர் பழனசாமி பெயரிலான கல் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை.
*2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு….இன்றுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை.
*கோவிட் -19 ன் உருமாற்றம் பெற்ற ஜே என் 1 தொற்று காரணமாக பாதிக்கப்படுகிறர்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு .. நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள்.
*தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது. .. இதன்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை இனி தேர்வு செய்வார்கள்.
*நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடாபாக உள்துறை அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம்… ஜனநாயகத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் ஊர்வலம்.
*நாடாளுமன்றத்தில் இருந்து மேலும் மூன்ற எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் .. இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.
*டெல்லி அரசின் மதுபான வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பி இருந்த சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகவில்லை ..அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டு உள்ள சம்மனை ரத்து செய்யக் கோரி கடிதம்.
*இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிஜு பூஷனின் நெருங்கிய கூட்டாளி சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தலில் வெற்றி … வீராங்கணைகள் பாலியல் புகார்களை தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தியதை அடுத்து பதவி விலகியவர் பிஜு பூஷன்.
*பிஜு பூஷனின் உதவியாளர் மல்யுத்த சம்மேளனத் தலைவர் தேர்தல் வெற்றிப் பெற்றதால் அதிருப்தி .. பிரபல வீராங்கனை சாஷி மாலிக் இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிப்பு
*பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் 40 பேரை விடுவிக்க ஒரு வாரம் சண்டையை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் … கத்தார் நாடு முன் வைத்த தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க ஹமாஸ் தலைவர்கள் மறுப்பதாக தகவல்.
*புரோ கபடி லீக் போட்டியின் நான்காவது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை இரவு ஆரம்பம் .. டிசம்பர் 27 வரை நடைபெற உள்ள போட்டியில் 11 ஆட்டங்கள்.
*பிரபல திரைப்பட நடிகை தமன்னாவின் 34- வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து .. மற்றொரு முன்னணி நடிகையான ஆண்ட்ரியவின் 38- வது பிறந்த நாளும் இன்று கொண்டாட்டம்.