*அயோத்தி ராமர் கோயிலில் ஐந்து வயது குழந்தை வடிவிலான ராமர் சிலை திறப்பு விழா … ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டு இருந்த துணியை அகற்றி உயிர்ப்பிக்கும் விழா பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் கோலாகலம்.
*பிராண பிதிஷ்டை என்ற பெயரில் ராமர் சிலை திறப்பு… பிராண என்றால் உயிர் கொடுத்தல், மூச்சு வழங்குதல் என்றும் பிரதிஷ்டை என்றால் நிறுவுதல் என்றும் பொருள்… பிற்பகல்12.30 மணி முதல் 12.40 மணிக்குள் கண்களை மூடியிருந்த துணி அகற்றப்பட்டு சிலை உயிர்ப்பு பெறும் நிகழ்ச்சி.
*ராமர் சிலை திறக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தாமரை மலர்களை கொண்டு பூஜை… தீப ஆராதனைக் காட்டி பிரதமர் வழிபாடு.
*ராமர் சிலை திறப்பு விழா மேடையில் பிரதமருடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் அனந்திபென் படேல், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்பு… நாட்டின் முன்னணி பிரமுகர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டு வழிபாடு.
*கோவில் கட்டுவதற்கு இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டதற்கு ராமரிடம் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி பேச்சு … ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் இந்த நாளை நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் பெருமிதம்.
*அயோத்தியில் நிறுவப்பட்டு உள்ள ராமர் சிலையை வடிவமைத்த கர்நாடக மாநில சிற்பி அருண் யோகிராஜ் மகிழ்ச்சி … உலகின் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்றும் ராமரின் ஆசி தமக்கு எப்போதும் உண்டு என்றும் நெகிழ்ச்சி.
*அயோத்தி ராமர் கோயிலில் முதல் நாளான இன்று விழாவுக்கு வந்திருந்த முக்கியமான பக்தர்கள் மட்டும் தரிசனம் … பொதுமக்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு
*அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்து கொள்ளும் பாஜகவினர் வதந்திகளை பரப்பும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டிகள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் … தமிழ்நாட்டின் உணமையான பக்தர்கள் பெருமானையும் வழிபடுவார்கள், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள், மற்ற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள் என்றும் அறிக்கை.
*அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டில் அனுமதி தரவேண்டாம் என்று முதலமைச்சர் வாய் மொழி உத்தரவு பிறப்பித்து இருந்தால் அதை செயல்படுத்த வேண்டாம் … சட்டப்படியான உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தல்.
*நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கிய வழக்கு … பல் பீர் சிங் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியின் இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
*கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் … இறைவனின் மறு அவதாரமாக இருக்கும் அய்யா வைகுண்டரின் ஆசியால் தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டாகும் என்று பேட்டி.
*தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் – 6,18,90,348 பேர்,பெண் வாக்காளர்கள் 3,14,85,724 ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 … ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்று வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு பேட்டி.
*கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட வாக்காளர் எண்ணிக்னை 7 லட்சம் அதிகரிப்பு … மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6,60,419 வாக்காளர்கள்… குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் ,கீழ்வேளூரில் 1,72,140 பேர்.
*சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் கடந்த வராம் நிராகரித்ததை அடுத்து ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் … ஜுன் மாதம் 14 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஏழு மாதங்களாக சிறையில் உள்ளார்.
*செந்தில் பாலாஜியின் சிறைக் காவலை ஜனவரி 29 -வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு… நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தி காவல் நீடிப்பு.
* புதுச்சேரியில் ஆட்டுப்பட்டி என்ற இடத்தில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு… பிப்ரவரி 11 – ஆம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் கதறல்.
*கொல்கத்தாவில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மத நம்பிக்கையை போற்றும் பேரணி … அயோத்தியில் ராமர் கோயில் திறப்பின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை.
*அசாம் மாநிலத்தில் பாரத நியாய யாத்திரை மேற்கொண்டு உள்ள ராகுல் காந்தி படத்ராவில் உள்ள வைணவ துறவி சங்கர்தேவா பிறந்த இடத்திற்கு செல்வதற்கு அனுமதி மறுப்பு… பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ராகுலுக்கு அனுமதி தரப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி புகார்.
*பாலத்தீனத்தின் காசா முனை மீது கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் 25 ஆயிரம் பேர் இறப்பு … காயம் அடைந்த பல ஆயிரம் பேர் போதிய சிகிச்சை கிடைக்காமல் தவிப்பதாகவும் புகார்.
*ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை உடனடியாக மீட்க்க கோரி உறவினர்கள் இஸ்ரேல் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்து கிளர்ச்சி … டெல் அவிவ் நகரத்தில் தடுப்பு அரண்களை உடைத்து உள்ளே நுழைந்ததால் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சிகள் பாதிப்பு.
*அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வு தேர்தலில் இருந்து புளோரிடா ஆளுநர் ரான் சாண்டீசும் விலகல் … இந்திய வம்சாவழி நிக்கி ஹேலி மட்டும் தேர்வுக் களத்தில் உள்ளதால் டிரம்புக்கு எதிர்ப்புக் குறைகிறது.
*சூப்பர் குட் பிலிம்சின் 98- வது படத்திற்கு மாரீசன் என்ற பெயர் அறிவிப்பு … பகத் பாசில், வடிவேலு நடிக்கும் படத்தை பிரபல மலையாள பட இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார், இசை யுவன் சங்கர்ராஜா.
*அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளில் மலையாள சினிமா நடிகைகள் பார்வதி திருவோது, ரிமா கலிங்கல் மற்றும் சில இயக்குநர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை வலைதளங்களில் பகிர்ந்ததால் பரபரப்பு … முகப்பு பக்கத்தில் இறையான்மை, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதை பகிர்ந்ததற்கு ஆதரவும் எதிர்ப்பும்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447