*தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேக தாதுவில் அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது… சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில்.
*தமிழ்நாடு அரசின் அலட்சியம் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது….தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேச்சு…. துரை முருகன் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு சாதகமாக தான், நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம்…. சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம்.
*தமிழ்நாடு சட்டப்பேரவையில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி அளிக்கவில்லை என்று புகார் …பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
*தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஒத்திவைப்பு … நாடளுமன்றத் தேர்தலுக்குப் பின் அடு்த்த கூட்டத் தொடர் ஆரம்பமாகலாம் என்று தகவல்
*நாடாளுமன்றதேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், அதிகாரிகள் குழு சென்னையில் 2 நாள் முகாம் … தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் உடன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆலோசனை.
*முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரும் 26- ஆம் தேதி திறக்கப்படும் என்று ட்டப்பரேவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. … ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு.
*இலங்கை கடற்படைக்கு எதிராக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள ராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை தொடங்க உள்ள கச்சத் தீவு விழாவை புறக்கணிக்க முடிவு … கச்சத் தீவு செல்வதற்கு பதிவு செய்துள்ளவர்கள் ராமேஷ்வரத்திற்கு வரவேண்டாம் என்று விழா ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்.
*திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் கிழ் பெண்ணாத்தூர் அருகில் அதிகாலையில் டிராக்டர் மீது கார் மோதி விபத்து … காரில் பயணம் செய்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.
*பெண்ணையாறு தண்ணீர் பகிர்வு விவகாரத்தில் இருக்கும் பிரச்னைகளை அறிக்கையாக 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய பெண்ணையாறு உடன்பாட்டுக் குழு உத்தரவு …டெல்லியில் நேற்று நடந்த முதல் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்திய வாதங்களை தொடாந்து நடவடிக்கை.
*பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.
*தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பிப்ரவரி 27- ஆம் தேதி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபின் இரவு மதுரைக்கு வந்து பாஜக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச முடிவு … மறு நாள் தூத்துக்குடியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி நெல்லையில் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக அறிவிப்பு.
*விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீ்ஷ் மனைவி பூர்ண ஜோதிக்கு சொந்தமாக சென்னை மாதாவரத்தில் உள்ள நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பதந்தம் போட்ட நிறுவனம் ரூ 43 கோடி மோசடி …. கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் அவருடைய உதவியாளர் கைது.
*புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவினங்களுக்கான ரூ.4,634 கோடி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி… குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த நிலையில் சட்ட முன் வரைவும் ஏகமனதாக நிறைவேற்றம்.
*மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்திற்கு வித்திட்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் இறப்பதற்கு காரணமான தீர்ப்பை மாற்றி அமைத்து மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவு … மொய்தி இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக குக்கி இன மக்கள் போராட்டத்தை ஆரம்பித்ததால் கலவரம் மூண்டது.
*பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்ததால் 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவிப்பு… அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை மாலை முடிவெடுக்க திட்டம்.
*டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று போலீசாருடன் நடந்த மோதலில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் …. விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தது இதயத்தை நொறுக்கி விட்டதாக வேதனை தெரிவித்து உள்ள ராகுல் காந்தி,பாரதீய ஜனதாவிடம் விவசாயிகள் கொலை பற்றிய கணக்கை வரலாறு ஒரு நாள் நிச்சயம் கேட்கும் என்றும் பதிவு.
*டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்து துறை 7- வது முறையாக சம்மன் … கடந்த ஆறு சம்மன்களை நிராகரித்த கெஜ்ரிவால் இந்த முறையாவது ஆஜாரவார என்பது உறுதியாகவில்லை.
*தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, ஓங்கோல் தொகுதி ஓய்.எஸ்.ஆர். கட்சி எம்.பி சீனுவாஸ் ஆகியோருக்கு டெல்லி அரசின் மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் … தங்களுக்கு தொடர்பு உடைய ஆலைகளில் இருந்து மதுபானங்களை வாங்குமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ 100 கோடி லஞ்சம் கொடுத்தார்கள் என்பது வழக்கு.
*ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக்குக்கு சொந்த மான 30 இடங்களில் சிபிஐ சோதனை … கடந்த 2018 ல் ஆளுநராக இருந்த போது காஷ்மீரில் நீர் மின் நிலையம் ஒன்று கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததில் லஞ்சம் பெற்றார் என்பது புகார்.
*காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை தகவல் … இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை.
*கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹315ல் இருந்து ₹340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்…. விண் வெளித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரே குடையின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தவும் அனுமதி.
*மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ. தீவிரம்….9 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு.
*மருத்துவர்கள், நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு தெளிவாக புரியும்படி CAPITAL LETTERS-ல் எழுத வேண்டும் … அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவு.
*மேற்கு வங்கத்தில் சிலிகுரி மிருகக் காட்சி சாலையில் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் வைக்கப்பட்ட பெயர்களை மாற்றி வேறு பெயர் வைக்குமாறு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு … மரியாதைக்கு உரிய பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்.
*விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும் அவரது தேசப்பக்தர்களும் உணவுக் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று நடிகர் கிஷோர் காட்டான பதிவு … விவசாயிகளை தேசத் துரோகிகள் என்று சொல்கிறவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும் என்று கேள்வி.
*அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளியான டீசருக்கு எதிர்ப்பு … படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் மற்றும் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஆகியோரின் உருவப் படங்களை தஞ்சையில் எரித்துப் போராட்டம்.
*ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 17- வது ஆண்டு ஆட்டத்திற்க்கான அட்டவணை வெளியீடு … மார்ச் 22- ஆம் தேதி சென்னையியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களுரு அணிகள் மோதுகின்றன.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447