* மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் வருமானம் குறித்த தரவுகளை காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய நடவடிக்கை … சொத்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் குடும்பத்தின் வருமான உயர்வைக் கண்டுபிடிக்கத் திட்டம்.
* அரியலூர் மாவட்டத்தில் பத்து இடங்களில் பெட்ரோல் கிணறு தோண்டும் ஓ.என்.ஜி.சி. முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு ..திட்டத்தைக் கைவிடுமாறு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
* அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் .. சீமான் கோரிககை.
* ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவரை உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த இடத்தில் கைது செய்தது என்.ஐ.ஏ.. இளஞைர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக புகார்.
* நாடளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் மக்களை ஏமாற்ற நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் .. மக்களிடம் கையெழுத்து வாங்கி யாரிடம் கொடுக்கப் போகிறார்கள என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி.
* இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியதுதான் … மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்றும் எடப்பாடி பழனிசாமி கருத்து.
* நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கி இருப்பது மிகப்பெரிய நாடகம் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் .. இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளிடமும் நீட் தேர்வுக்காக முதலில் கையெழுத்து வாங்க முடியுமா என்று கேள்வி.
* திருச்சியில் அடமான சொத்தை பறிமுதல் செய்வதற்கு சென்ற வட்டாட்சியரை 20 பேர் கும்பல் தாக்கியதாக புகார் .. அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும் அண்ணாமலை விமர்சனம் .
* வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதன் எதிரொலி … தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்.
* அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் தீவிர புயலாக மாறியது … தேஜ் அதி தீவிர புயலாக மாறி அக்டோபர்25 ஆம் தேதி அதிகாலை ஓமன் நாட்டில் கரையை கடக்கும என்று வானிலை மையம் அறிவிப்பு.
* தேஜ் புயல் கரையைக் கடக்கும போது ஓமன் நாட்டில் கன மழை பெய்ய வாய்ப்பு .. தமழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தகவல்.
* நாகை மாவட்டம் ஆறு காட்டுத் துறையில் இருந்து சென்ற மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் .. படகில் இருந்த நான்கு மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ 50 ஆயிரம் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல்.
* திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை …. பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தொழிலதிபரிடம் பணம் வாங்கி்கொண்டு நாடாளுமன்றத்தில் மொகூவா மொய்த்ரா கேள்வி கேட்டதாக கூறப்படும் விவகாரம்… திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாஜக கருத்து.
* இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாசுக்கும் போர் மூண்டு நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால் பாலஸ்தீனர்கள் வசிக்கும் கசாவில் பல லட்சம் பேர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு.. எகிப்து நாட்டின் ராபா எல்லை வழியாக மேலும் பல லாரிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க பல்வேறு நாடுகளும் கோரிக்கை.
* இந்தியாவில் இருந்து உணவு, மருந்து, பேர்வை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்கள் காசாவுக்கு அனுப்பி வைப்பு .. காசியாபாத் விமான நிலையத்தில் இருந்து 32 டன் நிவாரணப் பொருட்கள், ஆறடை டன் மருந்துகளுடன் சிறப்பு விமானம் எகிப்து நாட்டுக்குப் பயணம்.
* இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரை வழித் தாக்குதலை மேற்கொண்டல் முஸ்லிம் நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும் என்று பிரபல செய்தி நிறுவன இயக்குநரான இயான் பிரேமர் தகவல் … பாலஸ்தீனியர்களை பாதுகாக்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய நாடுகள் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் பிரேமர் கணிப்பு.
* தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் பட்சத்தில் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாக ரஷியா, சீனா ஓரணியில் திரளும் அபாயம் .. இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் மற்றாரு அணியும் ஏற்படக் கூடும் என்று கருத்து.
* ஹமாஸால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க தாய், மகளுடன் அதிபர் ஜோ பைடன் தொலை பேசி வழியாக நலம் விசாரிப்பு .. ஹமாசிடம் பிணைக் கைதிகளாக உள்ள இ்ஸ்ரேலியர்கள் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெருசேலத்தில் போராட்டம்.
* ஆயுத பூஜை கொண்டாட்டங்களினால் பழம் மற்றும் பூ விலை உயர்வு … சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை