*உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களை மீட்டு வெளியில் கொண்டு வரும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியது … செங்குத்தாக துளையிட்டு குழாய்களை உள்ளே அனுப்பும் பணி வெற்றிகரமாக நடப்பதாக மீட்புக் குழுவினர் தகவல்.
*தேசிய நெடுஞ்சாலை அமைக்க மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டும் போது சுரங்கத்தின் முன் பகுதி உடைந்த விழுந்ததால் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர் .. ஒன்பது நாளாக உள்ளே உள்ள தொழிலாளர்களுக்கு சிறிய குழாய் மூலம் உணவு, தண்ணீர் விநியொகம்.
*காசாவில் நான்கு நாள் சண்டை நிறுத்தத்திற்கு உடன்பாடு .. பணயக் கைதிகளாக உள்ள 50 பேரை விடுக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தகவல்.
*இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் இருந்து பாலஸ்தீனர்கள் 150 பேரை விடுதலை செய்ய சம்மதம் … கத்தார் நாடு முன்னின்று மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி.
*இப்போது 50 பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மற்ற பணயக்கைதிகளை விடுக்கவும் ஹமாஸை முற்றிலும் அகற்றும் வரையிலும் போர் நிறுத்தம் தொடரும் .. போர் நிறுத்தப்படும் நான்கு நாட்களிலும் நிவாரணப் பொருட்களை காசாவுக்கு கொண்டு செல்லவும் இஸ்ரேல் அனுமதி.
*திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை … இரண்டு வாரங்கள் முன்பு வேலுவுக்கு சொந்த மான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ 1.8 கோடி சிக்கிய நிலையில் மீண்டும் ஆய்வு.
*திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகன் என்பவர் சனமங்கலம் அருகே பதுங்கி இருந்த போது சுட்டுக் கொலை … உதவி ஆய்வாளர் வினோத் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக காவல் துறை தகவல்.
*சுட்டுக்கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன … கடந்த 19 ஆம் தேதி ஜெகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த கூட்டாளிகள் 9 பேர் கைது.
*ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழப்பு….ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நடந்த மோதலில் 2 அதிகாரிகள், 2 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
*சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக் காவல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு.. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை.
*நடிகை திரிஷா பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு … விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன்.
*நடிகை கவுதமியின் நில மோசடி புகாரில் அழகப்பன் என்பவர் பற்றி தெரிந்தால் தெரிவிக்குமாறு போலீசார் உத்தரவு .. அழகப்பன் மனைவியுடன் வெளிநாடு சென்றிருக்கலாம் என்றும் தகவல்.
*கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி நடைபெற்ற குரூர் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட உள்ளது … தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
*கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் மாஸ்க் அணியுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுரை… குழந்தைகள், முதியோருக்கு இந்த வைரஸ் தொற்று எளிதாக தாக்கலாம் என எச்சரிக்கை.
*உதகமண்டலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை பெண் காவலர்கள் கை விலங்கிட்டு நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றதாக புகார் … சிறுமிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல்.
*அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ 350 கோடிக்கு முறைகேடு செய்ததாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி புகார் … முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதில்.
*மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மருந்துகளை விற்பனை செய்ததாக 117 மருந்து விற்பனையகங்களின் உரிமை ரத்து .. மருந்துக் கட்டுப்பாட்டு த் துறை மூலம் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்.
*திருவனந்தபுரம் – சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும் போது பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு .. உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
*சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து… மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு.
*காங்கிரஸ் கட்சியில் உண்மையை பேசுகிறவர்கள் சச்சின் பைலட்டை போன்று ஒதுக்கி வைக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி புகார் … சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டும் காங்கிரஸ் தலைமைக்கு சவால் விட்டதால் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச் சாட்டு.
*பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பிக்பாக்கெட் அடிப்பது போன்று அதானி உள்ளிட்டோர் பணத்தை களவாடுகின்றனர் … பொதுமக்கள் வாங்கும் பெட்ரோலுக்கான பணத்தில் பாதி அளவுக்கு அதானிக்குச் செல்வதாகவும் ராகுல் காந்தி புகார்.
*காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை .. ராணுவ அதிகாரி மரணம். மூன்று வீரர்கள் காயம்.
*நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் கைப்பற்ற திட்டமிட்டது அமலாக்கத் துறை வழக்கு மூலம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது … உண்மைக்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேட்டி.
*மழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.. கல்லூரிகள் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன.
*அதிக மழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் அளிக்கும் விடுமுறையை ஈடு செய்திட சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
*மழை நிலவரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்து விடுமுறைக்கான அனுமதியை பெற வேண்டும்… பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கல்வித் துறை தரப்பில் அறிவுறுத்தல்.