தலைப்புச் செய்திகள்… (22-12-2023)

*தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு .. தமிழ்நாடு அரசு வெள்ளப் பாதிப்புகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் புகார்.

*வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 பேர் ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதுடன் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது … சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

*மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை சந்திப்பு .. தமிழக வெள்ளப் பாதிப்பு குறித்து விளக்கியதாக தகவல்.

*தமிழ்நாடு அரசு கோரிய நிதியை தராமல் பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளாதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் .. மக்கள் அனைவரும் அறிந்த புயல் வெள்ள பாதிப்பு செய்தி, நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் தெரியவில்லை என்று புகார்.

*மழை பாதிப்பு அதிகமென்பதால் தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தார் முதலமைச்சர் … ஆனால் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.

*பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகவல்… புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் விருதை கொடுப்பதாக விளக்கம்,

*ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்தது … தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டை

*முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகள் முடக்கத்தை விசாரணை நீதிமன்றம் நீக்கியதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு … “சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது” என உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விளக்கம்.

*கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் .. ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் தொடர்ந்திருந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

*தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை .. நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு.

*தூத்துக்குடியில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று வழக்கம் போல ரயில் சேவை தொடங்கியது … தூத்துக்குடி-மதுரை ரயில் பாதை முழுவதும் சீரமைக்கப்பட்டு சென்னை ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி.

*சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணம் பெற விண்ணப்பம் .. கடந்த 17ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்

*மழை நிவாரணம் கேட்டு சென்னையில் ரூ.4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும் விண்ணப்பம் கொடுத்து உள்ளனர் … திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேரும் விண்ணப்பம்.

*மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை என்றால் சென்னையில் வானிலை மையம் எதற்கு என்று அன்புமணி கேள்வி … மூடிவிடலாம் என்றும் யோசனை.

*இலங்கையால் சிறை பிடிக்கப்படும் மீனவர்களுக்கு சட்ட உதவிகளை இந்திய அரசு வழங்கி வருகிறது .. எந்த சூழ்நிலையிலும் தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்று இலங்கையிடம் வலியுறுத்துவதாகவும் மத்திய அமைச்சர் முரளிதரன், வைகோ எழுதிய கடிதத்திற்கு பதில்.

*19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டரின் விலை ரூ.39 குறைப்பு… ரூ.1968.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.39 குறைந்து ரூ.1929.50-க்கு விற்பனை.

*குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரெஞ்சு ஜனாதிபதி மேக்ரன் சம்மதம் .. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு.

*காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மதுபான வியாபாரியுமான திராஜ் சாகுவின் வீடு, அலுவலகம் மற்றும் ஆலையில் கைப்பற்றப் பட்ட பணத்தின் மதிப்பு ரூ 351 கோடி …ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுஇருப்பதாக தகவல்.

*சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு .. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் செய்வதற்கான நேரம் மேலும் கூடியது.

*நடிகர்கள் பிரபாஸ், பிருதிவி ராஜ் உள்ளிட்டோர் நடித்து உள்ள சலார் திரைப்படம் வெளியானது .. தெலுங்கு ,தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான படத்தை முதல் நாளிலேயே காண ரசிகர்கள் ஆர்வம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *