*அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்கிறது அமலாக்கத்துறை ,,,, வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கின் விவரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் கோரி, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு
*தஞ்சையில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரிப்பு… த்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுடன் சந்திப்பு
*மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி… அதிமுக அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக பொன்னையன் நியமனம்.
*அதிமுக வேட்பாளர் மாற்றம்:திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிப்பு.
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு… திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டி.
*சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி இருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் பாரட்டு .. முற்போக்கு நிலலைப்பாடுகளினாலும் எளியோரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் கிருஷ்ணா மீது அவதூறு பேசுவது வருத்தத்திற்கு உரியது என்றும் கருத்து.
*தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு … உரிய அனுமதி பெறாமல் வேளச்சேரியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்திய புகாரின் பேரில் நடவடிக்கை
*திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல்,விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்பரல் முதல் தேதி முதல் உயர்வுதாக அறிவிப்பு …மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் அதிகரிக்கிறது.
*உயர்வால் விலை வாசி அதிகரிக்கும் … கட்டண அதிகரிப்பை கைவிடுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் வங்கதேச ராணுவத்தால் கைது … சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்ட செல்வராஜிடம் விசாரணை.
*பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட தாய், சேய் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி… இந்தியாவின் நிதியுதவியுடன் 50 படுக்கை வசதிகளுடன் தாய்-சேய் நலமருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
*ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் இசைக் கச்சேரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு….100 பொதுமக்கள் உயிரிழப்பு…மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்டடத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக தகவல்.
*மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம். “இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும்” என்று உறுதி.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447