* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் மறுப்பு .. அரசின் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறியுள்ள ஆளுநர் வேறு ஒருவரை அந்த பதவிக்கு பரிந்துரைத்திருப்பதாக தகவல்.
* சைலேந்திர பாபுவுக்கு 62 வயதாக இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி இரண்டு ஆண்டு பதவிக்கு அவரை ஏற்க முடியாது என்று ஆளுநர் விளக்கம்.
* சைலேந்திர பாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க ஆளுநர் மறுத்திருப்பது அவருடைய அதிகார எல்லையை மீறய செயல் .. . தமிழக அரசு செய்கிற பரிந்துரைகளை மறுக்க ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று வைகோ கண்டனம்.
* விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக 8000 பேருந்துகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயக்கப்படும… தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அறிவிப்பு.
* தொடர் விடுமுறை நெரிசலைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த புகாரின் பேரில் 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் … கடந்த நான்கு நாளில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ 20 லடசம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்.
* நடிகை கவுதமி பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு … பாஜக பிரமுகரான அழகப்பன் அபகரித்த தன்னுடைய சொத்தை மீட்பதற்கு கட்சித் தலைமை உதவி செய்யவில்லை என்று புகார்.
* சொத்துகளை அபகரித்ததாக கவுதமி அளித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட ஆறு பேர் மீது சென்னை போலீஸ் வழக்கு .. அழகப்பன் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.
* பாஜகவில் இருந்த விலகினால்தான் சொத்து அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுதமிக்கு அழுத்தம் தரப்பட்டு இருக்கலாம் … கட்சியில் இருந்த விலகிய உடனேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பாஜக கருத்து.
* தமிழ் நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடியவர்கள் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாட்டை ஆண்டவர்கள் திட்டமிட்டே மறைத்து விட்டதாக ஆளுநர் ரவி புகார் .. மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழாவில் கருத்து.
* மோடி அரசின் சாதனைகளை விளக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பற்றி விமர்சனம் .. அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக மல்லிாகஜுர்ன கார்கே கண்டனம்.
*இந்திய தண்டனைச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்க திட்டம் .. நாடாளுமன்ற நிலைக்குழு அக்டோபர் 27 ஆம் தேதி கூடுகிறது.
* இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டை 17 வது நாளாக நீடிப்பு… நேற்றயை ஒரே நாளில் பாலஸ்தீனியர்கள் 400 பேர் கொல்லப்பட்டதாக புகார்.
* அமெரிக்க அதிபர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மெக்கரன் இஸ்ரேலுக்கு நாளை செல்ல முடிவு … ஹமாஸ் தாக்குதலில் பிரெஞ்சு நாட்டவர்கள் 20 பேர் கொல்லப்பட்டது உள்ளிட்டவை பற்றி நெதன்யாகுவிடம் விவாதிக்கத் திட்டம்.
* ஹமாஸ் போராளிகளை அறவே ஒழிப்பதற்கு காசா முனை மீது மூன்று மாதங்கள் தாக்குதல் நடத்தப்படும்… ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் ஒழிப்பதே லட்சியம் எனறு இஸ்ரேல் அறிவிப்பு.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற் பந்து வீச்சில் வல்லவருமான பிஷ்ன் சிங் பேடி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் .. 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியவர் பேடி.
* மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டகளை வீழ்த்தியவர் பேடி .. இந்திய முதல் தர போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையும் பேடிக்கு உண்டு,
* சீனாவில் நடைபெற்று வரும் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டின் தங்கவேல் மாரியப்பன் .. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து.
* சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த ரசிகரிடம் இருந்த தேசியக்கொடியை பறித்து குப்பைத் தோட்டியில் போட்டதாகப் புகார் … காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் கட்டுபாட்டு அறைக்கு மாற்றம்.
* வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் .. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் வேண்டுகோள்.