*இந்தியாவில் நேற்று 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 752ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு …. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 565 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்.
*சென்னையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா 7,500 ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு… சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1, வார்டு 4, 6, 7 ஆகிய பகுதிகள் எண்ணெய் கசிவால் பாதிப்பு.
*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு …. பட்டா மாற்றம் செய்துதரக் கோரிய மனுவை 6 மாதம் பரிசீலிக்காமல் இருந்ததால் நடவடிக்கை
*ஆடு,மாடு,கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு …பொது மக்கள் தங்கள் ஆதரார் அட்டையை காண்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்கம்.
*தமிழக அரசை பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் … தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்றும் பதில்.
*தமிழ்நாட்டின் மழை வெள்ளம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் நேற்று தெரிவித்த கருத்துகளுக்கு பல் வேறு தரப்பினரும் எதிர்ப்பு… கன மழை போது காசி தமிழ் சங்கமம் ரயிலை தொடங்கி வைத்தது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.
*கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு….ஏற்கனவே சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற உருவாக்கப்பட்ட mycertificates.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்.
*மணி முத்தாறு அதன் முழு கொள்ளவை எட்டியதை அடுத்து உபரி நீர் விநாடிக்கு இரண்டாயிரம் கன அடி வீதம் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் … கரை ஓர மக்கள் கவனமாக இருக்ககும் படி நெல்லை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
*மூன்று நாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் .. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடிகளி்ல் பெரும் நெரிசல்.
*அலங்காநல்லூரில் இந்த ஆண்டு வழக்கமான இடத்தில்தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்… ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தலைமையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு.
*சவுதி அரேபியாவில் இருந்து கர்நாடகம் மாநிலம் மங்களூரு துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் மீது அரபிக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் … கப்பலின் ஒரு பகுதி தீ்ப்பிடித்து எரிந்தது ,, ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தகவல் .
*ட்ரோன் தாக்குதலுக்கு ஆளான கப்பலை நோக்கி இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் விரைந்ததன… தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தகவல் இல்லை.
*கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு முந்தைய பாஜக அரசு விதித்திருந்த தடை விரைவில் அகற்றப்படும் .. முதலமைச்சர் சீதாராமய்யா தகவல்
*சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் …. லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
*காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதை அடுத்து பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தீவிர தேடுதல் வேட்டை … செல் போன் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தம்.
*காசா முனை மீது இஸ்ரேல் ராணுவத்தின் விமானப் படையும் தரை வழிப்படையும் தொடர்ந்து தாக்குதல் … வெள்ளிக் கிழமை இரவு நடந்த தாக்குதலில் மட்டும் 18 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தரப்பில் தகவல்,
*இஸ்ரேல் – ஹமாஸ் இடையோயான போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தல் .. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி்லில் தீர்மானம் நிறைவேற்றம்.
*திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம். … மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தல்.
*திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா…கோவிந்தா.. ரங்கா …. ரங்கா… என்ற முழக்கங்கள் இடையே சொர்க்கவாசல் திறப்பு. . இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.