*மணிகண்டன் இயக்கிய” கடைசி விவசாயி” சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வு… இதே படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது… நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி என்ற இந்திப் படம் சிறந்தப் படமாக தேசிய அளவில் தேர்வு.
*2021- ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்..சிறந்த நடிகைக்கான விருது இரண்டு நடிகைகளுக்கு பகிர்ந்தளிப்பு .. சிறந்த பாடகருக்கான விருது உன்னி கிருஷ்ணனுக்கு. சிறந்த பாடகி ஷரயா கோஷல்.
*ஆர்.ஆர்.ஆர்.படம் 2021 ஆம் ஆண்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெற்ற சிறந்த திரைப் படம்…சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த சண்டைக் காட்சி உள்ளிட்ட விருதுகளும் ஆர்.ஆர்.ஆர்.க்கு.
*ஆர்.ஆர்.ஆர்.படத்தில் இசையமைத்த கீரவாணிக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது.. இதே படத்தில் பாடிய கால பைரவா சிறந்த பாடகர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெறுகிறார் புஷ்பா படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத்.
*கோட நாடு கொலை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் .. ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்று அவருடைய அண்ணன் தனபால் பரபரப்புத் தகவல்.
*ஜெயலலிதா இறந்த பிறகு கோட நாடு பங்களாவுக்குள் கனகராஜ் நுழைந்து ஐந்து பெரிய பைகள் நிறைய ஆவணங்களை எடுத்து வந்தார் .. அவை அனைத்தும் எடப்பாடி சொன்னதன் பேரில் எடுத்த வந்தததாக தம்மிடம் சொன்னதாகவும் தனபால் பேட்டி.
*உதகமண்டலத்தில் ஆளுநர் மாளிகையில் அரசு செலவில் ஆளுநர் இல்ல திருமணம் நடந்ததாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறிய புகாருக்கு ஆளுநர் ரவி மறுப்பு.. திருமணத்திற்கு வந்தவர்கள் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் வாடகைக் கார்களை பயன்படுத்தியதாகவும் விளக்கம்.
*கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதியோ தடையில்லா சான்றிதழோ பெறப்படவில்லை என்று தமிழ் நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை .. சம்மந்தப்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு.
*சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றும் திட்டம் எதுவுமில்லை .. தொடர்ந்து பன்னோக்கு மருத்துவமனையாக செயல்படும் என்று சுகதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்.
*உயர்நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு அதற்குறிய செயலார்களோ அல்லது தலைவர்களோ தான் பதிலளிக்க வேண்டும் ..சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சென்னையில் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே 27-ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தம் .. கடற்கரை-எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க உள்ளதால் சேவையை நிறுத்தவதாக ரயில்வே விளக்கம்.
*காவிரி டெல்டா மாவட்டங்களில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுர கல்லூரி விழாவில் பங்கேற்பு.. திருக்குவளை அரசு பள்ளிக் கூடத்தில் காலை உணவுத்திட்டத்தை நாளை தொடங்கி வைப்பதற்கு ஏற்பாடு.
*டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக அண்ணாமலை பேட்டி … நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தகவல்.
*அமைச்சர் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .. திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு தமது நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுத்த சீனுவாசனுடன் சமரசம் ஏற்பட்டதால் நடவடிக்கை.
*சந்திராயன் 3- ன் லேண்டரில் இருந்து வெளியில் வந்த ரோவார் ஆய்வை தொடங்கியது … ‘நிலவில் நடைபோட்டது இந்தியா’ என்று குறிபிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
*பிரேசில்,ரஷியா,இந்தியா,சீனா,தென்னாப்பிரிக்கா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பை ஜனவரி முதல் விரிவுப்படுத்த நடவடிக்கை… அர்ஜெண்டைனா,எகிப்து,எத்தியோப்பியா,ஈரான் , சவுதி,மற்றும் ஐக்கிய அமீரகத்தை சேர்க்க ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த கூட்டத்தில் ஒப்பந்தம்.
*புதிய நாடுகளை சேர்த்து இருப்பது பிரிக்ஸ் அமைப்பை உறுதிப்படுத்தும் .. கூட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கருத்து.
*உலக மல்யுத்தக் கூட்டமைப்பில் இருந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நீக்கம் ..பாலியல் புகாருக்கு ஆளான பா.ஜ.க.எம்.பி.யை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காததால் நடவடிக்கை.
*இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமா அடுக்கு மாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்து நொறுங்கியது .. முன் கூட்டியே மக்களை வெளியேற்றியதால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு.
*மிசோரம் மாநிலத்தில் ரயில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு .. மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக தொடருகிறது.
*வாக்னர் என்ற கூலிப்படை தலைவர் பிராக்ஜின் விமான விபத்தில் இறந்ததை உறுதிப்படுத்தியது ரஷ்யா..விமான விபத்து திட்டமிட்ட சதி என்று புதின் எதிர்ப்பாளர்கள் கருத்து.
*புகுஷிமா அணு உலையின் கதிரியக்க நீரை சுத்திகரித்து கடலில் வெளியேற்றத் தொடங்கியது ஜப்பான் ..சீனா உள்ளிட்ட நாடுகள் ஜப்பானின் செயலுக்கு கண்டனம்.
*கதிரியக்க நீரை கடலில் விடுவதற்கு எதிராக ஜப்பானின் பல இடங்களில் போராட்டம் .. மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீன் விற்பனையாளர்கள் கவலை.
*செஸ் உலகக்கேப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.. நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் உலகக் கோப்பையை வென்று சாதனை.