தலைப்புச் செய்திகள் (24-09-2023)

*சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்… விஜயவாடா – சென்னை உள்பட 9 புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கத்தை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

*வந்தே பாரத் ரயிலில் செல்ல பயணிகள் ஆர்வம்… சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது.

*வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி பேச்சு… வந்தேபாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கருத்து.

*வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்…. பாஜகவின் திசை திருப்பும் முயற்சியை முறியடிப்போம் என்று ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

*மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு… மத்திய அரசு சாதனைகள் எதையும் செய்யாததால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக கருத்து.

*கீழடி அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது…அலை, அலையான வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் மணிகள் கிடைத்துள்ளது.

*சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு இபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது…. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு.

*அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை…. “நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்.

*ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு… மேலும் விசாரணைக்காக சந்திரபாபு நாயுடுவின் காவலை நீட்டிக்குமாறு சிஐடி போலீசார் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்.

*நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்….கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை.

*சந்திரயான் 3 விக்ரம், பிரக்யான் உடன் தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி…. இதுவரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அக்டோபர் 6ம் தேதி வரை தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி செய்யும் என இஸ்ரோ தகவல்.

*சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது… 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 7வது இடம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *