*ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ்.. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு.
*கடந்த வாரம் போக்கு வரத்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அதிக கட்ட ணம் வசூலித்த 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் .. பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து அறிவித்திருந்த போராட்டத்தை கைவிட்டனர் உரிமையாளர்கள்.
*ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் அறிவிப்பு .. சென்னையில் இருந்து திருசசிக்கு ரூ1610 முதல் 2410 வரை கட்டணம், மதுரைக்கு 1930 முதல் 3,070 வரை கட்டணம் நிர்ணயம்.
*சென்னை முதல் கோவை செல்வதற்கு ரூ 2050 முதல் 3070 வரை கட்டணம்.. சேலம் மற்றும் தஞ்சைக்கு ரூ 1650 முதல் 2500 வரை கட்டணம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு.
*சேலத்தில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தில் தீ விபத்து…கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உயிர்தப்பினர்.
*திமுக அரசு அமையும் போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது .. முதலைமச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதளத்தில் ஆளுநர் நேற்று சொன்ன புகாருக்கு மறைமுகமாக பதில்.
*கடந்த 29 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்த திட்டதையும் அறிவிக்க வில்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை .. தோல்வி பயத்தில் தம்மை விமர்சிப்பதாகவும் புகார்.
*நீட் விவகாரத்தில் அதிமுக செய்ததை தான் திமுகவும் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்து வருகிறது…. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
*வங்கக் கடலில் உருவனா ஹாமூன் புயல் வலுவிழக்கிறது … மணிக்கு 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்வதாக வானிலை மையம் தகவல.
*அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் ஏமன் கடற்கரையில் அதிகாலை கரையை கடந்தது … இரண்டு புயல்கள் ஒரே நேரத்தில் உருவான போதும் தென்னிந்தியாவில் மழை எங்கும் பெய்ததாக தகவல் இல்லை.
*இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு விசா தேவையில்லை … மார்ச் கடைசி வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டம்.
*இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, சீனா, ரசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கும் விசா தேவையில்லை .. சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலங்கை அரசு திட்டம்.
*ஆவடி ரயில் நிலையத்தி்ல் புறநகர் ரயில் பெட்டியின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து .. சென்னை மற்றும் ஆவடி இடையேயான புறநகர் ரயில் சேவை பகல் முழுவதும் பாதிப்பு.
*சென்னை வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த பரிதாபம் .. கர்நாடகத்தில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது ரயில் வரும் சத்தத்தை உணர முடியாமல் விபத்தில் சிக்கிய பரிதாபம்.
*ஒரிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றார் .. உடனடியாக பாண்டியனுக்கு காபினெட் அமைச்சர் தகுதியில் பதவி வழங்கி முதலமைச்சர் நவீன் பட்நாயக் கவுரவிப்பு.
*இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி .. இஸ்ரேலில் பிரதமர் நெதான்யாகுவை சந்தித்தபின் பிரான்ஸ் பிரதமர் மெக்ரன் பேட்டி.
*காசா முனையின் வடக்குப் பகுதியை விட்டு தெற்கு பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவு .. கடந்த 18 நாட்களாக நடைபெறும் போரில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.