தலைப்புச் செய்திகள்.. (24-11-2023)

*இ்ஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது… நான்கு நாள் சண்டை நிறுத்தத்தின் போது பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

*போர் நிறுத்தத்தின் போது தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலத்தீனர்கள் 150 பேரை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் … கத்தார் நாடு மேற்கொண்ட அமைதி முயற்சிக்கு முதல் வெற்றி.

*ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு … ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் தீவிரம்.

*துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் முந்தைய பாஜக அரசின் முடிவை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் … வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றைக் கூட சிபிஐ இதுவரை விசாரிக்கவில்லை என்று விளக்கம்.

*உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என்று தகவல் … மீட்புக் குழு, நடவடிக்கையில் தீவிரம்.

*ஆட்சியாளர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு … மணல் குவாரிகள் தொடர்பாக தமிழகத்தின் பத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளதை ரத்து செய்ய கோரிக்கை.

*உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 ஆம் தேதி நேரி்ல் ஆஜராககுமாறு அமலாக்கத் துறை சம்மன் … கடந்த ஜுலை மாதம் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் பற்றி விசாரிக்க நடவடிக்கை.

*சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு … புதிய விமான நிலையம் அமைக்க 3774 ஏக்கர் நிலம் எடுக்க நடவடிக்கை.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் மீது வழக்குப் பதிவு .. இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என்று ஸ்டாலின் கூறியதாக வலை தளங்களில் நடராஜன் பதிவு.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவ மனையில மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் … மூளையின் வலது புறத்தில் பாதிப்பு, முதுகெலும்பில் வீக்கம், பித்தப்பையில் கல் உள்ளிட்ட கோளாறுகள் இருப்பதாக விளக்கம்.

*இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் … சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைப்பு.

*கத்தாரில் 8 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல் முறையீடு .. இந்திய அரசின் மேல் முறையீடு குறித்து விசாரிக்க கத்தார் நீதிமன்றம் சம்மதம்.

*செங்கற்பட்டு , திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை … செங்கற்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் தறை உத்தரவு.தலைப்புச் செய்திகள்.. (24-11-2023)

*செங்கற்பட்டு , திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை … செங்கற்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் தறை உத்தரவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *