*உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த் சாகர் நகரத்தில் ஐந்து லட்சம் பேர் பங்கற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு … நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் கூட்டம் என்று பாஜக தரப்பில் தகவல்.
*கேரளா சட்டசபையில் 62 பக்கம் கொண்ட ஆளுநர் உரையின் முதல் வரியை படித்த ஆளுநர் ஆரிப் முகமது கான் பிறகு கடைசி வரியை மட்டும் படித்ததால் பரப்பு … ஆளுநர் உரை, தேசிய கீதம் இசைப்பது அனைத்தும் ஐந்து நிமிடங்களில் முடிந்ததும் ஆளுநர் கான் அவையை விட்டு வெளியேறினார்.
*பணிப்பெண்ணை தாக்கிய புகாரில் தலைமறைவாக இருந்த பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் கைது …. ஆந்திராவில் பதுங்கியிருந்த இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரிக்க நடவடிக்கை.
*தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் நிறுத்தம் …150 ஆம்னி பேருந்துகள் இணைப்புச் சாலையிலும் இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்திவைக்க ஏற்பாடு.
*சென்னையில் இருந்து செங்குன்றம் விழயாக ஆந்திராவுக்கும் பூந்தமல்லி வழியாக பெங்களூரு போன்ற இடங்களுக்கும் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும்…. மதுரை,திருச்சி போன்ற தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாபாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்பதில் அதிகாரிகள் கண்டிப்பு.
*கிளாம்பாக்கத்தில் இருந்த ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்… பயணிகள் தரப்பிலும் சென்னையில் இருந்த 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்திற்கு எப்படி செல்வது என்று கேள்வி.
*தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது… மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிப்பு.
*விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு கட்டணம் வசூலிக்குமாறு தென் மண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு … வசூலிக்கப்படும் கட்டணத்தை நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தவும் ஆணை.
*முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்… பல்வேறு ஊர்களில் இருந்து நடைபயணமாக வந்து முருகன் வழிபாடு. தமிழ்நாட்டில் அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலம்.
*வடலூர் சத்தியஞான சபையில் 153- வது தைப்பூச விழாவில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் … ஜோதியைக் கண்டதும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, என்ற முழங்கி பக்தர்கள் பரவசம். காலை, மாலை, இரவு என்று 6 காலங்களில் ஜோதி வழிப்பாட்டுக்கு ஏற்பாடு.
*ஜோதியைக் காண்பதற்காக பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வடலூரில் திரண்டனர் … வள்ளலார் அணையா அடுப்புக் கட்டி அன்னாதானம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில் வடலூரில் ஏரளாமான இடங்களில் இலவச உணவுக்கு பக்தர்கள் ஏற்பாடு.
*சென்னையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி என்பவருக்கு போலீஸ் வலை வீச்சு … நான்கு தினங்கள் முன் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மோதல் என்று தகவல்.
*கோயம்புத்தூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தோட்டத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை … குடும்ப பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
*திருப்பூர் அருகே தொலைக் காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொல்ல முயற்சி … மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நேச பிரபுவுக்கு தீவிர சிகிச்சை. குற்றவாளிகளை கண்டு பிடிக்க நடவடிக்கை.
*தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு 4 நாட்களுக்கு முன்பே தமக்கு ஆபத்து இருப்பதாக முறையிட்டும் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால்தான் தாக்குதல் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் … நேசபிரபு தாக்குல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்க்கை தயாரிக்க அதிமுக திட்டம்… தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன். சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்னையில் கூடி அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் பற்றி கருத்துப் பரிமாற்றம்.
*சென்னையில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டு முன்பே புதிய வீட்டில் சசிகலா சார்பில் குடிபுகும் விழா நடைபெற்றது … அரசியல் பணிகளை இனி இந்த புதிய இல்லத்தில் இருந்து தொடங்குவதற்கு சசிகலா திட்டம் என்று தகவல்.
*நடிகர் விஜய், நாடளுமன்றத் தேர்தல் குறித்து தமது மக்கள் இயக்க நிர்வாகிள் உடன் சென்னையில் ஆலோசனை … சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குச் சாவடி வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்.
*பாரத நியாய பயணத்தை கௌகாத்தி நகரத்திற்குள் அனுமதிக்க மறுத்த போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராகுல் காந்தி மீது ஒன்பது பிரிவுகளின் வழக்குப் பதிவு … வழக்கை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி அசாம் பாஜக அரசு உத்தரவு.
*கர்நாடகா மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு … கடந்த 2003-ஆம் ஆண்டு நிறுத்தப்ட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்திருந்தபடி செயல்படு்த்தி விட்டதாக சித்தராமையா பெருமிதம்.
*கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார் … சட்டசபை தேர்தலின் போது பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்த ஷட்டர் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
*குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக நாளை பங்கேற்க உள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மெக்கரன் ஜெய்ப்பூர் வந்தடைந்தார் … பிரதமர் மோடியுடன் இணைந்து காரில் முக்கய சுற்றுலா மையங்களுக்குப் பயணம்.
*இலங்கையில் கொழும்பு அருகே நடந்த சாலை விபத்தில் இணை அமைச்சர் நிஷாந்த் மரணம் … நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணி அளிவில் முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது நேரிட்ட விபத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரழப்பு.
*கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பிப்ரவரி 6- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ,… பிப்ரவரி 23 , 24 தேதிகளில் நடைபெற உள்ள விழாவில் இலங்கையி்ல் இருந்து 4 ஆயிரம் பேரும் இந்தியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்.
*இந்திய குத்துச் சண்டை வீராங்கணை மேரி கேம், ஓய்வுப் பெறப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு … விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற பசி இன்னும் தமக்கு இருப்பதால் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவிப்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447