*காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய விஜயதாரணி தமது விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்… விஜயதாரணி கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு விளவங்கோடு தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு மற்றும் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு … சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ளது திருக்கோயிலூர் தொகுதி.
*தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதிலீட்டில் அமையவுள்ள வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தயாரிப்பு ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் … தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் அமையும் முதல் கார் தொழிற்சாலை என்ற சிறப்பை பெறுகிறது வின்பாஸ்ட்.
*தூத்துக்குடியில் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு … மழை,வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்கு மத்திய அரசு ஒரு ரூ பாய் கூட தரவில்லை என்று புகார்.
*கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி அருகே மலைப்பாதையில் கவிழ்ந்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து விபத்து… லாரி ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.
*தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த போது பயணிகள் இல்லாத ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததால் பெரும் பதற்றம் ,,, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த வயதான சண்முகையா- வடக்கத்தி அம்மாள் தம்பதி மற்றும் காவலாளி சுப்பிரமணியன் ஆகியோர் டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு.
*சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் கருணாநிதியின் புதிய நினைவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நாளை மாலை திறந்துவைப்பு … கலைஞர் எழுதுகோலுடன் இருப்பது போன்ற சிலையும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார் என்ற தொடரும் பொறிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பு அறிக்கையில் தகவல்.
*மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிப்பு … கடந்த தேர்தலில் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளை பெற்று, வெற்றியும் பெற்றது இந்திய கம்யூனி்ஸ்ட்.
*பிப்ரவரி 27 பல்லடம் மற்றும் 28 -ஆம் தேதி திருநெல்வேலி பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி அதன் பிறகு மார்ச் 4 – ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரவுள்ளதாக தகவல் … கூட்டணி வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் செய்தி.
*டெல்லியில் பிடிபட்ட ரூ 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அவருடைய சகோதரர் முகமது சலீம் என்பவருக்கும் வலை வீச்சு … ஜாபர் சாதிக்கை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
*போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக், லட்சக்கணக்கான ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியிடம் அரசு நிவாரணமாக வழங்கியுள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு… விரிவாக விசரணை நடத்தக் கோரிக்கை.
*நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு … எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தங்களுடன் ரகசியமாக பேசியவர்கள் விவரத்தை வெளியிட விரும்பவில்லை என்றும் பேட்டி.
*சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரவின் என்பவர் குத்திக் கொலை … பெண்ணின் அண்ணன் தினேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை.
*உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் ராகுல் காந்தியுடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு.. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டதால் இருவரும் ஒன்றாக பயணம்,
*குஜராத் மாநிலத்தில் ஓகா துறைமுகம் முதல் துவாரகத் தீவு வரையில் அமைக்கப்பட்டுள்ள 2.32 கிலோ மீட்டர் தொலைவுக்கான கேபிள் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி …. ரூ 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள பாலத்திற்கு சுதர்சன் சேது என்று பெயர் வைப்பு.
*துவாராக நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் பிரதமர் மோடி கடலில் மூழ்கி பிரார்த்தனை … கடலுக்கு அடியில் மயிலிறகை காணிக்கையாக செலுத்திவிட்டு வந்ததாகவும் நெகி்ழ்ச்சி.
*ஆந்திராவில பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்ட சந்திரபாபு நாயுடு, பாஜக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் இழுத்தடிப்பு .. 10 நாடாளுமன்றத் தொகுதிகளும் 40 சட்டமன்றத் தொகுதிகளும் கொடுக்குமாறு பாஜக கேட்பதால் சிக்கல்.
*அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக்கொலை…. பகதூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
*சமாஜ்வாடி மற்றும் ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்துவிட்ட காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரினாமுலுடன் உடன்பாடு காண்பதில் சிக்கல் … மராட்டியத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு எற்படவில்லை.
*ஜம்மு-காஷ்மீரின் கதுவா ரயில் நிலையத்தி்ல் இருந்து பஞ்சாபின் ஹோஷியார்புரி வரை 78 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அனைவரும் அதிர்ச்சி … ஹேண்ட் பிரேக் போடாமல் ஓட்டுநர் கீழே இறங்கியதால் சரிவு காரணமாக சரக்கு ரயில் நகர ஆரம்பித்து வேகம் எடுத்து ஓடத் தொடங்கியதாக தகவல்.
*அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஆதரவு அதிகரிக்கிறது … கட்சிக்குள் போட்டியாளராக விளங்கும் நிக்கி ஹாலேவின் சொந்த மாகணமான தெற்கு கரோலினாவிலும் டிரம்ப் முன்னணி.
*உக்ரைன் நாட்டுடன் நடக்கும் போரில் ரஷிய ராணுவத்தில் உதவியாளர் வேலைக்குச் சேர்ந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமிலி மனுகுகியா என்ற 23 வயது இளைஞர் ட்ரோன் தாக்குதலில் இறப்பு… ரஷிய ராணுவத்தில் உதவியாளர் வேலைக்குச் சேர்ந்து உள்ளவர்களை மீட்குமாறு இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் கோரிக்கை.
*ராஞ்சியில் 4- வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது…. இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பு.
*இங்கிலாந்துக்கு எதிரான 4- வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின் ரவிச்சந்திரன்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் 35- வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், அனில் கும்ப்ளேவின் (35) சாதனையுடன் சமன்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447