*ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியதற்கு தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ..எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தற்கும் தடை விதிக்க மறுப்பு.
*உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு .. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி கை கட்சியில் மேலும் ஓங்கியது.
*உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் .. நீதியும் உண்மையும் வென்று உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து.
*அதிமுக கொடி, சின்னம் , கரை வேட்டி ஆகியவற்றை இனி ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ..பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.
*பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளிக்கூடத்தில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார் மு.க.ஸ்டாலின் .. தாம் தொடங்கி வைத்த திட்டங்களில் காலை உணவுத் திட்டந்தான் மனதுக்கு நிறைவை தருவதாக முதலமைச்சர் பெருமிதம்.
*தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் நடை பெற்ற காலை உணவுத் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு.. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு மாணவர்களுடன் உணவருந்தி மகிழ்ச்சி.
*காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை ..காவிரி மேலாண்மை ஆணையம் விரிவான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
*நாகப்பட்டினத்தில் நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை .. தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்துக் கேட்பு.
*செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் மூன்று நாட்கள் நீடித்த சென்னை நீதிமன்றம் 28- ஆம் தேதி ஆஜர் செய்ய உத்தரவு.. அன்று குற்றப்பத்திரிகை நகல் தரப்பட வாய்ப்பு உள்ளதால் அதன் பிறகு ஜாமீன் மனு தாக்கல் செய்ய அமைச்சர் தரப்பு முடிவு.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் 71- வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டார்கள் உடன் சந்திப்பு.. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்ததில் அனைவரும் மகிழ்ச்சி.
*சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் காட்சியை வெளியிட்டது இஸ்ரோ.. மிக,மிக மெதுவாக ரோவர் இறங்கும் காட்சி வைரலானது.
* “நிலவின் தென் துருவத்தில் 8 மீட்டர் தூரத்திற்கு வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர்”… ரோவரில் உள்ள LIBS மற்றும் APXS ஆகிய இரு கருவிகளும் செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ தகவல்.
*கிரிஸ் நாட்டுக்கு சென்று உள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் கிரியோ கோஸ் உடன் சந்திப்பு ..தலைநகர் ஏதென்சில் போர் நினைவுச் சின்னங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை.
* ஒருவரின் மரண வாக்கு மூலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை அளிக்க முடியாது .. உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.
*டெல்லியில் அடுத்த மாதம் ஒன்பது மற்றும் 10 – ஆம் தேதிகளில் நடை பெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் அதிபா் விளாடிமிர் புடின் பங்கேற்கமாட்டார் என்று ரஷ்யா அறிவிப்பு .. உக்ரைன் மீது போரைத் தொடங்கிய பிறகு வெளிநாட்டுப் பயணத்தை குறைத்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளார் புடின்.
*அமெரிக்காவின் 2020 அதிபர் தேர்தலின் போது ஜார்ஜியா மாகாணத்தின் தேர்தல் முடிவை மாற்ற முயன்ற வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டதால் சரண் அடைந்தார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் .. அட்லாண்டா சிறையில் சரண் அடைந்தவர் 20 நிமிட நேரத்தில் ஜாமீனில் விடுவிப்பு.
*ரஷ்யாவின் தனியார் ராணுவத்தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் இறந்தது பற்றி அதிபர் புடின் கருத்து .. கடந்த 1992 முதல் தமக்கு தெரிந்த தொழில் அதிபரான பிகோஜின் கடுமையான தவறுகளை செய்தவர் என்று விமர்சனம்.
*உக்ரைன் நாட்டுக்கு எப் – 16 என்ற அதி நவீன போர் விமானங்களை ஏற்கனேவே டென்மார்க் மற்றும் நெதர்லாந்து வழங்கி உள்ள நிலையில நாவேவும் வழங்கப்போவதாக அறிவிப்பு… இலக்குகளை துல்லியாமாக தாக்கும் திறன் கொண்ட விமானங்கள் கிடைப்பதால் வலுவாகிறது உக்ரைன் விமானப்படை.
*கொடைக்கானல் மலையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்கா இருவரும் உரிய அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாக புகார் .. உரிய விளக்கங்களை தருமாறு சம்மந்தப்பட்ட வில்பட்டி ஊராட்சி சார்பில் நோட்டீஸ்.
*கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் தொழிலாளர்கள் 9 பேர் இறப்பு .. மேலும் நான்கு பேர் காயங்களுடன் மீட்பு.
* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு… 70,000 லாரி அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளதாக நீதிபதிகள் வேதனை.
*கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி… புதுக்கோட்டை லெம்பலக் குடியில் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை கோரிய பொது நல வழக்கில் நீதிபதிகள் உத்தரவு.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிப்பு… ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை புனரமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசுக்கு தேர்வு.