தலைப்புச் செய்திகள்… (25-11-2023)

*போர் நிறுத்தத்தை ஏற்று 24 பிணைக் கைதிகளை விடுத்தது ஹமாஸ் … விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு குழந்தைகள், ஆறு பெண்கள் அடக்கம்.

*இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனர்களி்ல் 39 பேரை விடுவித்தது.. நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பும் மேலும் பலரை விடுவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பு.

*உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் உறுதியான தகவல் இல்லை … செங்குத்தாக துளையிட்டு குழாய்களை அனுப்பி அதன் வழியே தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கை தொடருகிறது.

*திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை சோதனை …மத்திய போலீஸ் துணையுடன் அதிகாரிகள் விசாரணை.

*ஆவின் பாலில் கொழுப்புச் சத்தை குறைத்து விட்டு விலையை குறைக்காமல் விற்பதாக புகார் கூறிய விவகாரம் … அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிய கடுமையான பதிலை அடுத்து இருவரும் நடத்தும் வார்த்தை் போர் வலைதளங்களில் வைரல்.

*முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான அவதூறு வழக்கை திரும்பப் பெற வேண்டும் … எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*தோட்டக் கலைத்துறையில் அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்பவுதற்கு போட்டித் தேர்வு … டிசம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், பிப்ரவரி 7 ஆம் தேதி தேர்வு என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

*மத்திய தேர்வாணையத்தின் தேர்வுகளை இந்திய மொழிகள் 22 லும் நடத்த வேண்டும் … உயர்நீதமன்றக் கிளையில் பொது நல வழக்கு.

*புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கல்வி நிலையங்களை சுற்றி விற்பதை தடுக்க நடவடிக்கை … தமிழ் நாடு முழுவதும் 247 குழுக்களை அமைத்து கண்காணித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்.

*அரசின் பொதுச் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அகற்றாத அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் .. உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு.

*ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது .. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குள் பதிவாகி இருக்கலாம் என்று தகவல்.

*பெங்களூரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி … தமது அனுபவம் நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என்று பிரதமர் பெருமிதம்.

*ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு அறிவிப்பு … டிசம்பர் ஒன்பதாம் கணக்கெடுப்பை தொடங்க திட்டம்.

*திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. மொகுவா மொய்த்ரா பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்த்தில் கேள்வி கேட்ட புகார் .. நாடாமன்றக் குழு பரிந்துரை பேரில் விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ.

*நடத்தை விதிகளை மீறியதாக சிட்டி யூனியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு அபராதம் .. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.

*சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கன மழை .. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

*தென்காசி சுற்றுவட்டாரங்களில் கன மழை .. நீர் வரத்து அதிகரித்ததால் குற்றாலத்தில் குளிக்கத் தடை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *