*இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழா டெல்லியில் கடமைப் பாதையில் ராணுவ வாகனங்களின் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் … குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரும் விழாவில் பங்கேற்பு.
*குடியரசுத் தின விழாவில் பெண் சக்தியை போற்றும் வகையி்ல் பெண் வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் … முதல் முறையாக முப்படையிலும் உள்ள பெண் வீராங்கணைகள் அணிவகுப்பு… பெண் கலைஞர்கள் 100 பேருடன் இசைக்குழு.
*டெல்லியில் குடியரசுத் தின விழாவில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தர் ஜனாதிபதி திரவுபதி முர்மு … முதல் நிகழ்ச்சியாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி அஞ்சலி …
*சென்னையில் கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார்.
*அரசு பள்ளிக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது… அரசு பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாயை மு.க.ஸ்டாலின் தமது கைகளால் விருது வழங்கி கௌரவிப்பு.
*ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைருக்கு தமிழ் நாடு அரசின் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்…சமூக ஊடகங்களில் வரும் செய்தியின் உண் மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையை வெளியிடுபவர் முகமது ஜுபைர்.
*மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது… சிறந்த காவல் நிலையத்திற்கான 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசைப் நாமக்கல், பாளையங்கோட்டை காவல் நிலையங்கள் பெற்றன.
*யாசர் அராஃபத், டேனியல் செல்வ சிங் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் …ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாரும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற்றார்.
*நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் … மக்கள் இயக்கம் சார்பில் பெரிய அளவிலான மாநாட்டை நடத்தி அதில் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை விஜய் வெளியிடலாம் என்று எதிர்பார்ப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிமுகவை தமது பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் பாரதீய ஜனதா கட்சி தீவிரம்.. விஜய்காந்துக்கு பத்ம பூஷன் விருது பற்றி வலைதளங்களில் கருத்து.
*பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை … மற்றவர்களை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை.
*இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரினி தமது 47 -வது வயதில் உடல் நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து திரை உலகத்தினர் அதிர்ச்சி … பல்வேறு தரப்பினரும் இளையராஜாவுக்கு ஆறுதல்.
*இலங்கையில் மரமணடைந்த பாடகி பவதாரிணி உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தியாகராயர் நகரில் முருகேசன் சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டதும் ஏராளமானவர்கள் அஞ்சலி .. பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத இழப்பு என்று நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.
*ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று ஆட்சிக்கு வந்த மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தந்தாரா என CPI அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி… மோடி ஆட்சியில் நாடாளுமன்றம் நிலைகுலைந்து போயுள்ளதாக குற்றச்சாட்டு.
*பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு…. நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
*பிப்ரவரி 5 முதல் 10ம் தேதி வரை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம் செல்ல திட்டம்… 9 மண்டலங்களாக சென்று மக்களின் கருத்துக்கள் கேட்க உள்ளதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து… தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு… அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு.
*காஷ்மீர் மற்றும் இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் கடந்த ஆண்டுகளை விட பனிப்பொழிவு மிகவும் குறைந்தது… சிம்லா போன்ற இடங்ளில் பனித்துகள்களால் போர்த்தப்பட்டு வெண்மை படலமாக அளிக்கும் காட்சிகளும் நடப்பாண்டு இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447