*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளி்லும் நாளை மாலை 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது …வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை முடிந்து 30 -ஆம் தேதி சின்னங்கள் ஒதுக்கப்படும்.
*நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்து உள்ள சொத்துக் கணக்குப்படி ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ 583 கோடி… அவருடைய மனைவிக்கு ரூ 70 கோடி சொத்துகள். தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் மிகவும் பணக்கார வேட்பாளர் அசோக்குமார் தான்.சிவங்ககை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ 400 கோடி.
*தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர் ராஜனின் சொத்து மதிப்பு ரூ 43 கோடி … தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பளார் சவுமியா அன்புமணிக்கு ரூ 60 கோடி மதிப்புள்ள சொத்துகள்.
*திமுக வேட்பாளர் கனிமொழிக்காக தூத்துகுடியில் நடைபயணமாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு … காய்கறி கடை உள்ளிட்ட இடங்களில் பொது மக்களை சந்தித்து ஆதரவு கேட்பு.
*தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமிக்காக எடப்பாடி பழனசிாமி ஓட்டு வேட்டை … திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜான்சி ராணிக்கு வாக்கு சேகரிப்பு.
*நாடளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் …காங்கிசரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சா..ரம் செய்ய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறுப்பு.. பத்துத் தொகுதியில் ஒரு தொகுதியை தமக்கு ஒதுக்க மறுத்ததால் காங்கிரசுக்கு பதிலடி.
*பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த மனு மீது நாளை காலை 9மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ..பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைப்பு.
*ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கல் … ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இதுவரை 5 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் சூழல்.தங்
*தனது அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு… இரட்டை இலை சின்னத்தை முடக்கும்பட்சத்தில் அதற்குப் பதிலாக தனக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
*நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை ஏற்க மறுப்பு … படகு அல்லது தீப்பெட்டிச் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை.
*மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிககல் … இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே ஒதுக்க விதி உள்ளதாக தேர்தல் ஆணையம் பதில்.
*இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கக்கூடிய காரணத்தால் தேர்தலில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் …வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு.
*தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நீலிகிரிக்கு சுற்றுலா வந்த பஞ்சாப் மாநில பயணியிடம் இருந்து ரூ 69 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் … நீண்ட விசாரைணக்குப் பிறகு பணம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பயணியிடம் ஒப்படைப்பு.
*பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தெடங்கியது.. மாநிலம் முழுவம் ஒன்பது லட்சத்து பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்பு. தேர்வு அரங்குக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவரப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு.
*முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய .3 பேருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியது … மூவரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
*இறுதி ஊர்வலங்களில் போது சாலைகளில் பூ மாலைகளை வீசுவதால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மாலைகளை வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக டி.ஜி.பி. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் … புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
*பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய ஆளுங்கட்சியான அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக மேற்கொண்ட முயற்சிகளில் பின்னடைவு … பாஜக விதித்த நிபந்தனைகளை ஏற்காமல் 13 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட அகாலிதளம் முடிவு.
*அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ய்ப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த ஆம் ஆத்மி கட்சி முயற்சி … பிரதமர் வீட்டைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு .. அருகில் உள்ள மெட்ரா ரயில் நிலையகங்கள் மூடல் . கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி பாஜக போட்டி போராட்டம்.
*தெலுங்கானாவில் முந்தைய டி.ஆர்.எஸ்.கட்சி ஆட்சியின் போது இப்போது முதலமைச்சராக இருக்கும் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்ட புகாரின் பேரில் காவல் துறை அதிகாரிகள் மூன்று பேர் ஒருவர் கைது.. உளவுத் துறை தலைமை அதிகாரியாக இருந்த பிரபாகர் அமெரிக்காவில் இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ்.
*ஒட்டுக் கேட்பதற்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து உளவுக் கருவிகளை தெலுங்கான அரசு வாங்கியிருப்பது விசாரணையில் அம்பலம் … ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு அருகே நவீன சாதனங்களை பொருத்தியதும் கண்டுபிடிப்பு.
*டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யபட்ட சந்திர சேகரராவ் மகள் கவிதா, பத்து நாள் விசாரணை முடிந்து டெல்லி நீதிமன்த்தில் ஆஜர் … மேலும் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு.
*காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய மறுத்ததால் அமெரிக்கா மீது இஸ்ரேல் கடுமையான அதிருப்தி … வாஷிங்டன் செல்லவிருந்த உயர் மட்டக் குழுவின் பயணத்தை நிறுத்தி வைத்து இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு பதிலடி.
*அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் கப்பல் மோதியதில் இடிந்தது… 2.6 கி.மீ. நீளம் கொண்ட பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இடிந்ததில் 10 பேர்கஆற்றில் விழுந்து தவிப்பு.
*ஆசிய நாடுகளில் அதிக பணக்காரர்கள் இருக்கும் நகரங்களின் பட்டியலில் சீனாவின் பெய்ஜிங் நகரத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடம் பிடித்தது மும்பை நகரம் … உலக அளவில் செல்வந்தகள் வசிக்கும் நகரங்களில் மும்பைக்கு மூன்றாவது இடம், முதல் இடத்தில் நியூ யார்க், இரண்டாவது இடத்தில் லண்டன்.
*சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதன் எதிரொலி … நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447