* தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்….சட்டம் – ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
* ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து….சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாக வெளியிட்ட அரசிதழை உடனடியாக திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவு.
* டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி, 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்… மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
* அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை.
* மத்திய அரசு பணிக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்…. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவதாக தகவல்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி… சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவனுக்கு சிகிச்சை.
* காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும்…. தமிழ்நாட்டிற்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம் என சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
* தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…. சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
* கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் தடை…. தனபால் கருத்துக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருப்பதற்கு முகாந்திரம் உள்ளதாக கருத்து.
* கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்… மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி கருவிகளை பறித்து அடாவடி
* தேனியில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு முதன்முறையாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு…. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வடிவேல் என்பவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.
* வாக்குறுதி அளித்தபடி ரூ.1000 கொடுத்தோம்… பிரதமர் வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் எங்கே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…”அதிமுக – பாஜக கூட்டணி முறிவு அரசியல் நாடகம்” என்று தருமபுரியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.
* சென்னை நந்தனத்தில் அக்டோபர் 14ஆம் தேதி திமுக மகளிர் உரிமை மாநாடு…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே ஆகியோரும் பங்கேற்கின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தகவல்.
* அமெரிக்காவிலுள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல், சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க்….தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் தீம் பார்க் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு.
* புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் 2018ல் அளித்த புகார்…. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.
* காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை…. வரும் 28ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு அறிவுறுத்தல்.
* விவசாயிகள், மாநில நலன்களை பாதுகாப்பதில் கர்நாடக அரசு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை… காவிரி நீர் இருப்பு குறித்து மத்தயி நிபுணர்கள் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்.
* மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் தவறு செய்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்….புதுச்சேரி கோயில் நிலம் அபகரிப்பு வழக்கில் தவறு செய்த எம்எல்ஏக்கள், சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவு.
* ஈரோடு, சென்ன சமுத்திரம் பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை…பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு.
* கடலூர் மாவட்டம், சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில், அரசிற்கு சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலம், நீர்நிலைகள் திமுக எம்.பி. மற்றும் திரைப்பட இயக்குனரின் உறவினர்களுக்கு பட்டா வழங்கிய விவகாரம்…. விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தகவல்