*ஆளுநர் ரவியுடன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்திப்பு … நேற்று நடை பெற்ற பெட்ரேல் குண்டு வீச்சு தொடர்பாக விளக்கம்.
*ஆளுநர் மாளிகை தரப்பில் டிஜிபி மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்ததில் புகார்… ஆளுநரை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.
*ஆளுநர் மாளிகை தரப்பில், தாங்கள் கொடுத்த புகாரை பதிவு செய்யவில்லை என்று காவல் துறை மீது புகார் … குண்டு வீசியவரை அவசர கதியில் சிறையில் அடைத்து விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் கருத்து.
*ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தின் பின்புலம் குறித்த விசாரணையை தொடங்கியது என்.ஐ.ஏ…. புழல் சிறையில் இருந்த போது தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்க முடிவு.
*தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% வரை போனஸ்… C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
*குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார்…சென்னை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
*மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி 11 லட்சம் பேர் முறையீடு … மனுக்கள் மீது அதிகரிகள் ஆய்வு.
*நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக கூறி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு .. அவசர வழக்காக கருதி விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு.
*கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளிக் கூட பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு … பேருந்தில் பயணித்த மாணவர்கள் 14 பேரும், ஓட்டுநரும் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
*பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்தது சென்னை கோட்டூர்புரம் போலீ்ஸ் .. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது முதலமைச்சர் படத்தை அகற்றி விட்டு பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் நடவடிக்கை.
*சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நாளை இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஹாரிஸ் ஜெயராஜ்க்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி .. அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் டிக்கெட் விற்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் கட்டுப்பாடு விதிப்பு.
*சென்னை உட்பட 7 மாவட்டங்களில் டாஸ்மக் கடைகளில் பார் அமைப்பது தொடர்பான டெண்டர்களின் மீது முடிவுகளை அறிவிக்கக் கூடாது .. உயர்நீதிமன்றம் உத்தரவு.
*இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நாட்டில் தூக்கு தண்டனை விதிப்பு… தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு உளவு பார்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.
*கனடா நாட்டில் உள்ள தூதரகங்களி்ல் இந்தியா வருவதற்கான விசா வழங்கும் பணி ஆரம்பம் … இந்திய தூதரகங்களுக்கான பாதுகாப்பை கனடா அதிகரித்ததை அடுத்து விசா கொடுக்கும் பணி தொடங்கியது.
*கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்ததால் விசா கொடுப்பதை நிறுத்தி இருந்தது இந்தியா .. ட்ரூடோவின் புகாரினால் இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
*மராட்டிய மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு.. கோயிலின் புதிய கட்டிடகளை திறந்து வைப்பு.
*ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் தோதோசாரா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை .. மற்றொரு வழக்கில் முதலமைச்சர் அசோக் கேலாட்டின் மகன் வைபவுக்கு அமலாக்கத் துறை சம்மன் ..
*கொல்கத்தாவில் மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை .. ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறை கேடு செய்ததாக எழுந்த புகாருக்கான ஆதாரங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை என்று தகவல்.
*திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. மொகூவா மொய்தி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு பணம் வாங்கியதாக கூறப்படும் புகார் … அக்டோபர் 26 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற விசாரணைக் குழு உத்தரவு.
*அமெரிக்காவில் லூயிஸ்டன் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழப்பு .. நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம்.
*காசா முனையின் வடக்குப் பகுதிக்குள் தரை வழியாக நுழைந்து பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு … ஹமாசின் 200 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் திரும்பி வந்து விட்டதாகவும் தகவல்.
*தரை வழித் தாக்குதலின் நோக்கம் ஹமாசின் இலக்குகளை அழிப்பது, அங்கு பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்பதற்கான உத்திகளை வகுப்பது .. தரை வழித் தாக்குதல் பற்றிய விவரங்களை பகிந்து கொள்ள முடியாது என்றும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம்.
*ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் சிரியா நாட்டின் ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் … சிரியா தரப்பில் ராணுவ வீரர்கள் 8 பேர் இறப்பு.
*தமிழ்நாட்டில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு … உள் மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்களில் அதிக மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
*பெங்களூருவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி….157 ரன்கள் வெற்றி இலக்கை 25.4 ஓவர்களில் எட்டியது இலங்கை.