*அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணத்தின் நிறைவாக பல்லடத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு … நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திருப்பம் ஏற்படும் என்று பேச்சு.
*பல்லடம் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்களான பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜி.கே.வாசன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு… பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம், டி..டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
*பல்லடம் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு… மதுரையில் தங்கியுள்ள மோடி தேர்தல் ஏற்பாடு குறித்து பாஜக தலைவர்கள் உடன் ஆலோசனை.
*பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் இன்று மதியம் தங்கள் கட்சியில் சேர உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் காலையில் வெளியிட்ட அறிவிப்பால் பகல் முழுவதும் பரபரப்பு… அதிமுகவின் முக்கிய நிர்வாகி நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக அண்ணாமலை கூறியதற்கு எடப்பாடி தரப்பு தந்த பதிலடி என்று கருத்து.
*மாற்றுக் கட்சியினரை இழுப்பதற்கு அண்ணாமலை விரித்த வலையில் யாரும் சிக்கவில்லை .. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
*பாஜகவின் அழைப்பை நிாகரித்து பாமக, தேமுதிக இரண்டும் அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி என்று தகவல் … புதிய தமிழகம் கட்சியும் எடப்பாடி தலைமையை ஏற்கும் என்றும் கருத்து.
*கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு, அமைச்சர் பதவியை சில வாரங்கள் முன் ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு … நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் வழங்க உள்ள தீர்ப்பின் முடிவை அறிய பெரும் எதிர்ப்பார்ப்பு.
*பல்வேறு துறை சார்பில் ரூ 10,417 கோடி மதிப்புள்ள திட்டங்களை சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் … ரூ 7,300 கோடி செலவில் நிறுவப்பட்டு உள்ள மின் நிலையங்களும் திறக்கப்பட்டதில் அடக்கம்.
*இமாச்சல் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் அபாயம்…. மாநிலங்கவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் கட்சித் தாவி பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதால் அரசுக்கு ஆபத்து.
*சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்… மாநில அரசு விநோதமான மனுவை தாக்கல் செய்துள்ளது…. அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
*தென்காசி அருகே இரண்டு நாள் முன்பு தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த போது அந்த வழியே வந்த பாலருவி விரைவு ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்திய தம்பதிக்கு தமிழக அரசு வெகுமதி … சண்முகையா- வடக்கத்தியா தம்பதிக்கு ரூ 5 லட்சம் வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
*திமுக அரசை கண்டித்து மார்ச்.4-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு … திமுக நிர்வாகி போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதால இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவு என்று புகார்.
*போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் மூன்று செல்போன்களும் செயல்படவில்லை … ஜாபரின் இருப்பிடத்தைக் கண்டறிய அவருடைய கூட்டாளிகளை விசாரிக்கத் திட்டம்.
*பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பது கடந்த 1892- ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்ததை மீறிய செயல் என்று அமைச்சர் துரைமுருகன் கண்டனம் … அணை கட்டுவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அணை கட்ட பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் கருத்து.
*சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 26 ஆசிரியர் பணியிடங்களை பொதுப் போட்டி பிரிவுக்கு ஒதுக்கி ஆட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கைவிட வேண்டும் … 26 இடங்களில் 17 இடங்களை அருந்ததி சமூகத்திற்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்குமாறும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*நெல்லை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடங்குகிறது… திருக்குறுங்குடி வனச்சரகத்தில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்களுக்கு நடந்து செல்ல மட்டுமே அனுமதி என்று வனத்துறை அறிவிப்பு.
*சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவு…. கோவிட் காலத்தில், சாதாரண பயணிகள் ரயிலில், விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய கட்டணம் வசூலிப்பு அமல்.
*நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாகையில் 15 கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் … ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கடலுக்குச் செல்வதை நிறுத்தி மீனவர்கள் போராட்டம்.
*இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீர்வழி கப்பலின் செயல்பாட்டை நாளை தூத்துக்குடியி்ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி … மணியாச்சி – நாகர்கோயில் இரட்டை ரயில் பாதையும் பிரதமரால் நாளை திறப்பு.
*பிரதமர் மோடி நாளை தூத்துக்குடி நிகழ்ச்சியில சிதம்பரம்- மீன்சுருட்டி, தருமபுரி – ஜித்தண்ட ஹள்ளி நான்கு வழிச்சாலைகளையும் திற்நது வைக்க ஏற்பாடு … அரசு விழாவில் பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்க திட்டம்.
*கர்நாடக மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் மூன்று இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் … இரண்டு இடங்களுக்கு குறிவைத்த பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.
*அரியானாவில் நேற்று முன்தினம் இந்திய தேசிய லோக்தளக் கட்சித் தலைவர் ராதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தி்ல் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகம்…. ரயில்வே கிராசிங்கில் கார் நின்ற போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாபே சிங் ராதி மற்றும் அவருடைய உதவியார் பலியானதால் பதற்றம் தொடர்கிறது.
*டெல்லி அரசி்ன் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எட்டாவது முறையாக அமலாக்கத் துறை சம்மன் .. இந்த முறையும் நிராகரிப்பாரா அல்லது ஆஜராவரா என்பதற்கு விடையில்லை.
*சுகன்யான் திட்டத்தின் கீழ் விண் வெளிக்குச் செல்லும் நான்கு விமானிகள் பெயர்களை திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார் பிரதமர் மோடி .. இந்திய விமானப் படையில் பணியாற்றும் நான்கு பேருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தீவிர பயிற்சி.
*குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரான் ரத்வா பாஜகவில் சேர்ந்தார்… அவரது எம்.பி. பதவி முடிவடைய இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.
*காசா முனையில் மார்ச் 4- ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை … கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் நிலை குலைந்து கிடக்கிறது காசா,
*இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வந்த இறைவன் மிகப் பெரியவன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் … படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுவதால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் படக்குழு குழப்பம்.
*சட்டவிரோதச் செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் தொடர்ந்த பணியாற்றப் போவதில்லை என்று இயக்குநர் அமீர் அறிக்கை … சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு தாம் எதிரானவன் என்றும் விளக்கம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447