*நிலவின் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலையை சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டா் ஆய்வு செய்யத் தொடங்கியது … விக்ரம் லேண்டரின் உள்ள கருவி அனுப்பிய ஆய்வுப் படத்தையும் வெளியிட்டது இ்ஸ்ரோ.
*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை திட்டமிட்டப்படி விண்ணில் ஏவுவதற்கு நடவடிக்கை … இந்திய விணிவெளி ஆய்வு மையத் தலைவர் சோம்நாத் தகவல்.
*மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதிற்க்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்து வாக்களிப்பதற்கு வசதி.. சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பரிசோதித்துப் பார்க்க தேர்தல் ஆணையம் திட்டம்
*மதுரை ரயில் பெட்டி தீவிபத்தின் போது தப்பி ஓடிய ஐந்து பேரில் மூன்று பேரை பிடித்து போலீஸ் விசாரணை .. மற்ற இருவர் சொந்த ஊர் சென்றிருக்கலாம் என்பதால் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை.
*ரயில் பெட்டி தீ பிடித்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை .. நேற்றைய விபத்தில் உயிரிழந்த 9 பேர் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பும் முன் மதுரையில் அமைச்சர்கள் அஞ்சலி.
*துவாராகாவுக்கு சாலை அமைப்பது உட்பட மத்திய அரசின் ஏழு திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாகப்பட்டினத்தில் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு … மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு.
*நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச் சாவடிகளில் ஐந்து சாவடிகளில் மட்டுமே ரூ 132 கோடி முறைகேடு .. செங்கற்பட்டு அடுத்த பரனூர் சுங்கச் சாவடியில் ஆறரை கோடி ரூபாய் சுருட்டப்பட்டு உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
*மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் துவாராக நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளதே தவிர முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறவில்லை என்று அண்ணாமலை பதில் .. குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் தரப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப் படவில்லை என்றும் அறிக்கை.
*யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டை திருமண விழாவில் அப்படியே படித்து உள்ளார் ஸ்டாலின் .. மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை படிப்பது முதல்வர் பதவி வகிப்பவருக்கு அழகல்ல என்றும் அண்ணாமலை விமர்சனம்.
*நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தர மாட்டார் என்று அவருடைய சகோதரர் சத்திய நாராயணன் பேட்டி .. ரசிகர்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்றும் விளக்கம்.
*அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர்.. ஜி 20 மாநாடுகளிலேயே அதிக தலைவர்கள் பங்கேற்கும் மாநாடாக இருக்கும் என்று பிரதமர் மோடி பெருமிதம்.
*அரியானாவில் இரு வாரங்கள் முன்பு கலவரம் நடந்த நூக் மாவட்டத்தில் பேரணி நடத்துவதற்கு வி.எச்.பி.க்கு அனுமதி கொடுக்க காவல் துறை மறுப்பு .. இணைய சேவைகளையும் துண்டித்து நடவடிக்கை.
*கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா தொலை பேசியே வழியே பேசியதால் சர்ச்சை .. பாஜகவில் இருந்து விலகி கடந்த தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்து விட்ட ஷட்டரை இழுக்கத் திட்டம் என்ற தகவலால் பரபரப்பு.
*பஞ்சாப் ஆளுநர் பன்வரிலால், தமது கடிதங்களுக்கு மாநில அரசு பதில் அளிக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என்று அறிவித்ததால் சர்ச்சை … முதலமைச்சர் பகவந்த் மான், ஆளுநரின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போவதில்லை என்று பதிலடி.
*மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் உயிரிழந்த பரிதாபம் … விசாரணை நடத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு.
*டெல்லியில் ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களின் காலிஸ்தான் தனி நாட்டுக்கான விளம்பரங்களை மர்ம நபர்கள் எழுதியதால் பரபரப்பு.. உடனடியாக விளம்பர வாசகங்களை அழித்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை
*உத்திரபிரதேசத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் இசுலாமிய மாணவனை மற்ற மாணர்வர்களைக் கொண்டு அடிக்கச் சொன்ன பள்ளி ஆசிரியை கைது செய்யக் கோரிக்கை வலுக்கிறது … பள்ளிக்கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
*சபரிமலையில் திருவோணம் பூஜைக்காக நடை திறப்பு .. அடுத்த ஐந்து நாட்களுக்கு ஐயப்பனை தரிக்கலாம் என்று அறிவிப்பு.
*அமெரிக்காவில் ஜாக்சான்வில்லில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கருப்பு இனத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு .. துப்பாக்கிச் சூடு நடத்தியவனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறப்பு.
*ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற தேர்தலில் எம்மர்சன் மானகாகவா 52 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாவது முறை அதிபராக தேர்வு … எதிர்க்கட்சி வேட்பாளர் நெல்சன் சாமிசா 44 சதவிகித வாக்குள் பெற்று தோல்வி.