தலைப்புச் செயதிகள் … ( 27-11-2023)

*உத்தர காண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி தீவிரம் … 15 நாட்களாக உள்ளே சிக்கி உள்ளவர்களை தொடர்பு கொள்ள இணைப்பு வசதியை ஏற்படுத்தியது பி.எஸ்.என். எல். நிறுவனம்.

*முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு, சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கம்பீரச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. விழாவில் வி.பி.சிங் குடும்பத்தினர் , உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் பங்கேற்பு.

*வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு என்று மு.க.ஸ்டாலின் பெருமிதம்…வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைவதாகவும் பேச்சு.

*மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு …. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது என்று அமலாக்கத்துறை தரப்பு வாதம்.

*மணல் குவாரி வழக்கில் யாரையும் பாதுகாக்கவில்லை ….சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்று தமிழ்நாடு அரசு விளக்கம்.

*அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு … ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பழனிசாமி தரப்பு எதிர்ப்பு.

*சீனாவில் பரவி வரும் மர்மக்காய்ச்சலை அடுத்து தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், முகக் கவசம் உள்ளிட்டவகளை போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை .. முன்னேற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் ஆலோசனை.

*புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண காய்ச்சல் காரணமாக 260 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை … காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிறப்பு வார்டுகள் அமைப்பு.

*தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அதிக அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் … காய்ச்சல் பரவலைக் கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிக்குமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை .. மின் வெட்டு காரணமாக வெண்டிலேட்டர் செயலிழந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

*திருவாரூர் மருத்துவமனையில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அன்புமணி வலியுறுத்தல் … அரசு மருத்துவமனைகள் தரம் குறைவாக பராமரிக்கப்படுவதை திருவாரூர் நிகழ்வு உணர்த்துவதாக அண்ணாமலை கருத்து.

*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,நீக்கம்,முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக 15 லட்சம் பேர் மனு .. டிசம்பர் 29 ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

*விழுப்புரம் மாவட்டம் நல்லாம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பாஸ்கரை 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தது போலீஸ் .. கணவரின் இறப்புச் சான்றிதழ் கேட்ட வந்த இருளர் சமூக பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.

*கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் மீது குண்டர் சட்டம் … உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் முருகன்.

*தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் உதயநிதி.

*ஒரிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். வேலையில இருந்து விலகிய கார்த்திகேய பாண்டியன் பி.ஜு. ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார் … முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நிழல் என்று கூறப்பட்ட கார்த்திகேய பாண்டியன் வரும் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்ப்பு

*இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் … சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே கோவிலில் பணிக்கு செல்ல அனுமதி
அளிக்கப்பட்டது.

*சத்தீஸ்கர் மாநிலம் தண்டோவாடா வனப்பகுதியில் 14 வாகனங்கள் மாவோயிஸ்டுகளால் தீ வைத்து எரிப்பு .. சாலை அமைப்புப் பணியை செய்துவரும் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனங்கள் எரிந்து சாம்பல்.

*இந்தியர்கள் விசா இல்லாமல் வந்து 30 நாட்கள் வரை தங்க மலோசிய அரசு அனுமதி …இந்தியா மட்டுமின்றி சீனா நாட்டவருக்கும் விசா கட்டுப்பாடுகளை நீக்கியது மலேசிய அரசு

*ஆபிகெயில் ஈடன் என்ற 4 வயது அமெரிக்க பெண் குழந்தையை விடுதலை செய்தது ஹமாஸ் இயக்கம் … குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்.

*இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்ப்பு .. போர் நிறுத்தம் நீடித்தால் மேலும் சில பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு.

*சீனாவில் நிமோனியா போன்ற காய்ச்சல்களால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு … சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் குவியும் பொதுமக்கள்.

*தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. .. இது 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகாவும் மாறக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

*கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் முதல் தேதி அன்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் .. அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டுகோள்.

*காந்தார ஏ லெஜன்ட் படத்தின் முதல் தோற்றத்தின் டீசர் வெளியானது … ரிஷிப ஷெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள கன்னடப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *