*உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேர் பத்திரமாக மீட்பு… 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
* சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. சில்க்யாரா – தண்டல்கான் இடையே நவம்பர் 12 ஆம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்த விபத்தில் தொழிலார்கள் சிக்கினர்.
* உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்….கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
* 17 நாட்களாக தொழிலாளர்கள் சந்தித்த தடைகள் மனித சகிப்புத் தன்மைக்குச் சான்று என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நெகிழ்ச்சி… நம்பமுடியாத மனஉறுதியுடன் செல்பட்ட மீட்புக்குழுவினருக்கு வாழ்த்து.
* தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் பாராட்டத்தக்கது… சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு.
*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு … விசராணை நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு கூறியதால் மனுவை திருப்பப் பெற்றது செந்தில் தரப்பு.
*கடந்த ஜுன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறு மாதங்களாக நீதிமன்றக் காவலின் பேரில் சிறைக் கைதியாக உள்ளார்.. உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
*செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் தற்போதைய நிலை நீடித்தால் அவருக்கு பக்க வாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் வாதம் … வழக்கறிஞர் சொல்வது போன்று உடல் நிலை பாதிப்பு தீவிரமாக இல்லை என்று நீதிபதிகள் கருத்து.
*சுடுகாட்டுக்கு கூரை ஊழலில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்டு இருந்த இரண்டு வருட சிறைத் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் … கடந்த 1991 முதல் 1996 வரை அமைச்சராக இருந்த செல்வகணபதி சுடுகாட்டுக்கு கூரை அமைக்கும் பணியில் ரூ 23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியாதாக வழக்குப் பதிவு செய்திருந்தது சி.பி.ஐ.
*சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பி இருந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை … அடுத்தக் கட்ட விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
*மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிவிட்டு பணியை தொடங்கவில்லை என்று தொடரப்பட்ட பொது நலவழக்கு .. எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு.
*அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் … வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஒ. பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தை ஏற்று நடவடிக்கை.
*பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 400 கோடி முதலீட்டில் 4000 பேருக்கு வேலை வழங்கக் கூடிய காலனி தொழிற்சாலையை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் … 2028 ஆம் ஆண்டுக்குள் 29,500 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக முதல்வர் பேச்சு.
*முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு வழக்கு விசாரைணையை ஆறு மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு … உணவு அமைச்சராக இருந்த போது ரூ 350 கோடிக்கு முறைகேடு செய்தார் என்று ஒ.பி.எஸ். அணியை சேர்ந்த புகழேந்தி வழக்கு.
*கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் நுழைந்து 100 சவரன் நகைகள் கொள்ளை அடித்துச் சென்று உள்ளதாக தகவல் .. ஊழியர்கள் உட்பட பலரிடன் போலீஸ் விசாரணை.
*எடப்பாடி பழனிசாமி மீது கே.சி.பழனிச்சாமி தொடந்த அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்தலாம்… வழக்கை கீழமை நீதிமன்றம் ரத்து செய்திருந்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை.
*சென்னையில் நடிகை குஷ்பு வீட்டுமுன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் .. கடந்த வாரம் சேரி மொழியில் தமக்கு பேசத் தெரியாது என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாத என்று குஷ்பு பேட்டி.
*சென்னை ஐ.ஐ.டி.யில் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பேராசிரியர் அசோக்குமார் சென் தற்காலிக பணி நீக்கம் .. பேராசிரியர் கொடுத்த மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் பேரில் நடவடிக்கை.
*ஓசூரில் நெடுஞ்சாலையில் சாகசம் செய்ய பயன்படுத்திய ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் …இளைஞர்கள் மூன்று பேருக்கு அபராதம் விதித்த போலீஸ், சிறுவர்கள் மூன்று பேரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது.
*மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை சான்றிதழ் கொடுப்பதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவித்த வழக்கு .. மும்பை சி.பி.ஐ.அலுவலகத்தில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கம்.
*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கடட்த்தில் ஓட்டுநர் இல்லாமல் ரயில்களை இயக்கும் திட்டம்… அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ 290 கோடிக்கு மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம்.
*பெங்களூரில் இருந்து ஓசூருக்கு மொட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய நடவடிக்கை …இன்னும் ஆறு மாதங்களில் ஆய்வறிக்கையை தயார் செய்து முடிக்குமாறு மெட்ரோ நிறுவனம் உத்தரவு.
*கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பம் 4 ஆம் தேதி விடுமுறை .. கோட்டாறு தூ ய சவேரியார் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு.
*ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் கடைசியாக தெலுங்கானாவில் நாளை மறுதினம் வாக்குப் பதிவு .. கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக நடந்த தேர்தல் பரப்புரை மாலையுடன் ஓய்ந்தது.
*ஐதராபாத்தில் கடைசி கட்டமாக ஆட்டோ ரிக்சாவில் நின்றபடி ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு .. பிரியங்கா, அசோக் கேலாட் உள்ளிட்டோரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம்.
*கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமியை கொல்லத்தில் விட்டுவிட்டுச் சென்றனர் கடத்தல்காரர்கள் .. போலீல் தீவிர தேடுதல் நடத்தியதால் சிறுமியை விடுவித்து விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாக தகவல்.
*இஸ்ரேல் –ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளதால் மேலும் பல பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்கள் என்று எதிர்பார்ப்பு … சண்டை நிறுத்தத்தை பயன்படுத்தி நிவராணப் பொருட்களை காசாவுக்குள் அனுப்பி வைப்பதில் ஐ.நா. ஊழியர்கள் தீவிரம்.
*வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பு .. டிசம்பர் முதல் தேதி உருவாகக் கூடும் என்று எதிர்ப்பாக்கப்பட்ட புயல் சற்று தாமதம் ஆகலாம் என்று வானிலை மையம் தகவல்.