*நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை… அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிகவை இழுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.
*ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம் மேற்கொண்ட தமக்கு ஸ்பெயின் நாட்டில் இந்திய தூதர் தினேஷ் கே பட்நாயக் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு… தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில் பதிவு.
*பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மறு நாளான இன்று அம்மாநிலத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் … மேற்கு வங்கத்தில் இருந்து பீகாருக்குள் வந்த ராகுல் காந்திக்கு எல்லையில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. உற்சாக வரவேற்பு,
*சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் கிளாம் பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் … திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி,நாகர்கோயில் பயணிகள் நாளை முதல் கோயம்பேடு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்.
*மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி,விழுப்புரம்,கடலூர், பண்ருட்டி,கும்பகோணம், திருச்சி, சேலம், திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தரப்பு அறிவிப்பு … கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் புறப்படும். வேலூர் ,ஓசூர் பேருந்துகளை பூவிருந்தவல்லியில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கை.
*சென்னை மாநகரப் பேருந்துகளில் யு.பி..ஐ. முறை மூலம் தொடுதிரை வசதி கொண்ட புதிய கருவியின் மூலம் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களை தேர்வு செய்து டிக்கெட் வழங்கும் புதிய வசதி அறிமுகம். … முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கொடுக்கும் முறை அமலுக்கு வந்தது.
*திமுக – இந்தய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பிப்ரவர் 3- ஆம் தேதி பேச்சு வார்த்தை …. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 4- ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு..
*கோவையில் மை வி 3 ஆட்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை … விளம்பரம் பார்த்தால் பணம் வரும் என்று கூறி மோசடி செய்வதாக அந்த நிறுவனத்தின் காவல் துறை தரப்பில் குற்றச் சாட்டு,
*மை வி 3 லாட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கோவையில் திரண்டதால் பரபரப்பு … யூடியுபில் விளம்பரம் பாப்பதன் மூலம் தங்களுக்கு வருவாய் கொடுக்கும் நிறுவனத்தின் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்கை ரத்து செய்யுமாறு வலியுறுத்தல்.
*முடித்துவைக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றம் விசாரணை … முடித்துவைக்கப்பட்ட வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அமைச்சர் தரப்பில் தெரிவித்த கருத்துக் குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
*சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு …. அமைச்சர் பதவியில் தொடரும் நோக்கத்தோடு தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்குமாறு பொன்முடி வைத்த கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
*நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை விடுவிக்குமாறு இலங்கையின் பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவு … மீண்டும் எல்லைத் தாண்டி மீன்பிடித்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் விடுவிப்பு.
*மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பிய பல்கலைக் கழக மானியக் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 31- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு … கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 7 மாதங்களாக சிறையில் உள்ளார்.
*”ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒருபோதும் ஒப்பிடுவது அவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” . என்று “பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை… நாடு முழுவதும் பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.
*மாநிலங்களவையில் காலியாகப் போகும் 56 உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி தேர்தல் … உபி, பீகார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பனிர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.
*கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் தேசியக் கொடிக்கு அனுமதி வாங்கிவிட்டு ஏற்றப்பட்ட அனுமன் கொடியை போலீசார் அகற்றியதால் இரண்டாவது நாளாக பதற்றம் … மாநிலத்தின் பல இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்.
*ஏமன் வளைகுடாவில் சோமலியா நாட்டு கடற் கொள்ளையர்களால் ஈரான் நாட்டின் மீன் பிடிக் கப்பல் 17 மீனவர்கள் உடன் சிறைபிடிப்பு … ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் விரைந்து சென்று கொள்ளையர்களை விரட்டி மீனவர்கள் உடன் கப்பலையும் மீட்டது.
*இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்புடன் சேர்ந்த சதித்த்திட்டம் தீட்டியதாக புகார் … ஈரான் நாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஜடோஜா , கே.எல். ராகுல் விலகல் … காயம் காரணமாக விலகுவதாக தகவல்,
*திரைப்பட நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக கூறி அனைவரையும் குழப்பிய விவகாரம் ,,, சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447