*தமிழ்நாடு அரசு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரியிருந்த நிலையில் 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநில அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உத்தரவு.
*காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு .. அணைகளில் 47 சதவிகித தண்ணீர் உள்ளதால் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று விளக்கம்.
*அருணாசால பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதி போல சித்தரித்து வரைப்படம் வெளியிட்டது சீனா … ஏற்கனவே அருணாசலத்தின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டியிருந்த சீனா இப்போது வரைபடமும் வெளிட்டு உள்ளதால் சர்ச்சை.
*அருணாசலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா மீது துல்லியத் தாக்குதல் நடத்தலாம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் யோசனை .. ஏற்கனவே பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி பெருமைப் பட்டுக் கொண்டதை சுட்டிக் காட்டி விமர்சனம்.
*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கியது இ்ஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் .பதவியின் போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் விதிக்கப்பட்டு இருந்த மூன்று ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு.
*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 200 குறைப்பு … பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு .. ஜாமீன் கொடுப்பதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் நேற்று தெரிவித்ததை அடுத்து அமர்வு நீதிமன்றத்தை நாடியது செந்தில் பாலாஜி தரப்பு.
*முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,மனைவி இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்.. செப்டம்பர் 16- ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு.
*நாகர்கோயிலில் பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கு அனுமதி தருமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..புதிய வீடுகள் கட்டுவதற்கு தடையாக உள்ள விதிகளை திமுக அரசு நீக்க வேண்டும் என்று கோரிக்கை.
*பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீதான 11 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு .. திமுக எம்.பி. கனிமொழி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிளை அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு.
*மதுரையில் தீப்பிடித்து எரிந்த உத்திரபிரதேச மாநில ரயில் பயணிகளின் பெட்டியை வழியில் சோதிக்கவில்லை என்று புகார்.. பல்வேறு மாநில ரயில்வே அதிகாரிகள் 45 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு.
*பாமக ஆண்டு விழாக் கூட்டத்தை கடலூரில் நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் உடன் அனுமதி ..மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை கூட்டம் நடத்தலாம், ஆனால் என்.எல்.சி. விவகாரம் பேசக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிப்பு.
*நாகர்கோயிலில் கடந்த 24-ஆம் தேதி நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் தள்ளிவிட்ட வீடியோ வைரல் ஆன விவகாரம்.. பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் உட்பட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை
*நடிகை விஜயலட்சுமியை தான் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கூறப்படும் புகார் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது அவமானமாக உள்ளது என்று சீமான் பேட்டி.. நடிகை கூறும் புகாரின் பின்னணியில அரசியல் இருக்கலாம் என்றும் கருத்து.
*நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது தேசீய புலனாய்வு முகாமை .. கேரளா கடற்கரையில் போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி சிக்கிய வழக்கில் நடிகையின் உதவியாளர் சிக்கியது பற்றி தகவல் திரட்டுவதற்கு நடவடிக்கை.
*பழனி முருகன் கோயிலில் கருவறைக்குள் எடுத்த வீடீயோ வலைதளங்களில பரவியதை அடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு .. கோயிலில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
*சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இயங்கும் குடி தண்ணீர் லாரிகள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு .. ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கேட்டு நடத்தப்பட உள்ள போராட்டத்தில் பத்தாயிரம் லாரிகள் பங்கேற்க இருப்பதாக தகவல்
*பாஜக தலைமையிலான என்.டி.ஏ மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மும்பையில் ஆகஸ்டு முதல் தேதியன்று ஒரே நாளில் ஆலோசனை நடத்த ஏற்பாடு ..நாடாளுமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க இருதரப்பும் முடிவு.
*சந்திராயன் 3-ன் ரோவர் நிலவின் மேற்பரப்பில் இருந்த 4 மீட்டர் ஆழ பள்ளத்தை தவிர்த்து விட்டு சாதுர்யமாக பயணம் .. மூன்று மீட்டர் தொலைவுக்கு முன்பே பள்ளத்தை பார்த்துவிட்டு பாதையை ரோவர் மாற்றிக் கொண்டதாக இஸ்ரோ தகவல்.
*கேரளா உட்பட மலையாளிகள் வாழும் அனைத்து இடங்களிலும் ஓணம் பண்டிகை கோலாகலம் .. வாசலில் அத்திப் பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து பறிமாற்றம்.
*நாகை அருகே உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் கொடியேற்றத்துடன் பத்து நாள் திரு விழா தொடங்கியது.. நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிவார்கள் என்பதால் இரண்டாயிரம் போலீஸ் பாதுகாப்பு.
*சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் கொடியேற்ற விழாவைக் காண பல ஆயிரம் பேர் திரண்டனர்.. திருவான்மியூர், அடையாறு போன்ற இடங்களில் போக்கு வரத்து நெரிசல்.
*இந்தோனேசியாவில் பாலி கடற்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளிவுகோலில் 7 புள்ளிகளாக பதிவு.. ஆழ் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
*தேர்தல் முறைகேடு வழக்குகளை 2026- ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்குமாறு முன்னாள் அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.. அடுத்த ஆண்டு மார்ச் முதல் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்கா நீதிமன்றம் அறிவிப்பு.
*பிரான்ஸ் நாட்டில் பள்ளிக்கூடத்திற்கு இ்ஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தடை விதிக்க முடிவு.. மாணவிகளில் ஒரு பிரிவினர் தலையை மூடிக்கொண்டு வருவது மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளதாக கல்வி அமைச்சர் கருத்து.
*ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியவேண்டும் என்ற எதிராக பாட்டு வெளியிட்டவர் மீது நடவடிக்கை ..பிரபல பாடகரான மெக்தி யராகியை கைது செய்து விசாரணை.