* கேரளாவில் எர்ணாகுளம் அருகே களமச்சேரி என்ற இடத்தில் கிறித்தவ வழிப்பாட்டுக் கூட்டத்தில் அந்த சபையின் உறுப்பினேரே குண்டு வைத்த விபரீதம் … பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் பெண்மணி ஒருவர் இறப்பு, காயம் அடைந்த 30 பேருக்கும் தீவிர சிகிச்சை.
* கேரள கிறித்துவ கூட்ட அரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் வகை வெடிகுண்டு என்பதை உறுதி செய்தது கேரளா காவல் துறை .. தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற என்.ஐ.ஏ., தேசிய பாதுகாப்புப் படை மற்றும் கேரளா தீவிரவாத தடுப்புப் படை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளா குண்டு வெடிப்பு குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் ஆலோசனை … களமச்சேரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு துரதிர்ஷ்டவசமானது என்று பினராயி கருத்து.
* கிறித்தவ கூட்ட அரங்கில் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டீன் என்பவர் தாமாகவே கொட்டக்கார காவல் நிலையத்தில் சரண் .. சபையின் செயல்பாது தமக்கு பிடிக்காததால் குண்டு வைத்ததாக வாக்குமூலம்.
* சரண் அடைவதற்கு முன்பு குண்டு வைத்தற்கான காரணத்தை விளக்கி டொமினிக் வெளியிட்ட வீடீயோவால் பரபரப்பு .. டொமினிக்கை காவலில் எடுத்து குண்டு வைத்தற்கு வேறு காரணம் உள்ளதா என்பதை அறிய போலீ்ஸ் முடிவு.
* இஸ்ரேல், பாலஸ்தீனம் போரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய பேரணியில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார் பினராய் விஜயன் .. குண்டுவெடிப்புப் பற்றிய தகவல் கிடைத்ததும் அவசரமாக கேரளா திரும்பினார் பினராய்.
* கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து தமிழ்நாட்டு எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்… ரயில் நிலையங்கள் போன்ற இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.
* ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு… பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
* தேனி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுக்குள் வேட்டையாடச் சென்றவர் வனத்துறை அலுவலர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு … தாக்க வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விளக்கம்.
* இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 37 மீனவர்களை விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் … பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை நிலை நாட்டுமாறு வலியுறுத்தல்.
* இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை .. பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு.
* சிவங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் தடை உத்தரவு அமல்… சொந்த வாகனங்களில் வருவோரை மட்டும் அனுமதிக்க முடிவு. பசும்பொன்னுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் விக்கிரமன் என்பவர் மீது சென்னை வட பழனி போலீசர் வழக்குப் பதிவு … லண்டனில் வசிக்கும் பெண் வழக்கறிஞர, தம்மை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை.
* வந்தே பாரத் ரயில் தயாரிப்பு ஒப்பந்தம், டிடாகர் வேகன் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளதாக புகார்.. சென்னை ஐ.சி.எப். ரயில் பெட்டி ஆலைத் தொழிலாளர்கள் அதிர்ச்சி என மார்க்சிஸ்ட் கட்சி கருத்து.
* சென்னை, சேலம் இடையே விமானப் போக்குவரத்தை தொடங்கியது இன்டிகோ நிறுவனம் .. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 11.20 க்குப் புறப்பட்டு சேலம் சென்றது.
* நடிகர் விஜயின் லியோ பட வெற்றிவிழாவை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்துவதற்கு முடிவு… பாதுகாப்பு வழங்குவது குறித்து படத்தயாரிப்பு நிறுவனத்துடன் ஆலோசனை நடத்த போலீஸ் திட்டம்.
* மனதில் குரல் நிகழ்ச்சியில் தமிழக எழுத்தாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு … சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை ஒருங்கிணைத்து வருவதாகவும் ஏ. கே.பெருமாள் கதை சொல்லும் பாரம்பரியத்தை பாதுகாத்து வருவதாகவும் புகழாரம்.
* டெல்லி உட்பட பல மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்து உள்ளதை பிரதமர் மோடி கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கே புகார் .. மோடிக்கு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலை சொல்வார்கள் என்று விமர்சனம்.
* தமிழ் நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி மின்சார தேவை 17,300 மெகாவாட் … அக்டோபரில் அதிக மின்சாரம் பயன்படுத்துவது இதுவே முதன் முறை என்று மின் வாரியம் கருத்து.
* சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கலுக்குள் திறக்க நடவடிக்கை .. அனைத்து பணிகளையும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு.
* உலகக் கோப்பை 2023 : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தது; பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியடைந்தது.