*தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடளுமன்றக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உடன் அமைச்சர் ஆலோசனை … எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதால் அவை சுமூக மாக நடை பெற ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்.
*ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தின் மீதான தாக்குதல், லாலு பிரசாத் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் … நாளை மறுதினம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா.
*மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், முதலீட்டுடை அதிகரித்து இருப்பதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. … ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
*கடைநிலை அரசு ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், இதேபோல் கைது செய்யப்பட்டவர் 230 நாட்களாக அமைச்சராக நீடிக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து … செந்தில் பாலாஜியின் மனு மீது கருத்த தெரிவித்த நீதிபதி விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
*சென்னையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா, காங்கிரசுக்கும் தொகுதிகளை பெற்றுத் தாருங்கள் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கே.எஸ். அழகிரி பேட்டி….தமிழசு அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
*சென்னை அருகே கட்டப்பட்டு உள்ள கிளாம்பாக்கம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ முழுமையாக பயன்பாட்டிற்கு வந்ததது… திருச்சிக்கு தெற்கே உள்ள மாவட்டங்களுக்கான அரசுப் பேருந்தகள் அணைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து காலை முதல் இயக்கம்.
*சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி, புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கம் ஆரம்பம் … வேலூர், ஓசூர் போன்ற ஊர்களுக்காக பேருந்துகள் இயக்கம் பூவிருந்தவலிலிக்கு மாற்றம்.
*மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாதத்தில் ஒரு நாள் கிராமத்தில் 24 மணி நேரம் தங்கி பொது மக்கள் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது .. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடன் தலைமைச் செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் … பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பணியிடங்களை நிரப்வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
*ஜி.எஸ்.டி. துணை ஆணையர் பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று திடீர் சஸ்பெண்ட் … புகார்களில் சிக்கி இருப்பவர்களை ஓய்வு பெறுவதற்கு முன்பு சஸ்பெண்ட் செய்து வைப்பது அரசு நடைமுறை.
*நாடளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் நிலவரத்தை துள்ளியமாக அறிய பாஜக தலைமை முடிவு .. அடுத்த மாதம் தமிழ்நாட்டில் இருந்த 300 பேரை டெல்லிக்கு அழைத்த கள நிலவரம் பற்றி கருத்துக் கேட்க திட்டம்.
*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அனுமதி கேட்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை தாக்கல் செய்தது எய்ம்ஸ் நிர்வாகக் குழு…மதுரை அடுத்த தோப்பூர் பகுதியில் 221 ஏக்கர் நிலப்பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியும் கட்டுமானம் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*மகாத்மா காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு மதவெறிக்குப் பலியான மகாத்மா என்ற வாசகத்துடன் திமுக ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு … ரத்தத் துளிகளின் சிதறுலுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கண்டு பொது மக்கள் வியப்பு
*ஐகேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனங்களின் இணை நிறுவனரான சுனில் வாத்வானி தாம் படித்த சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ 110 கோடி நன்கொடை … நிதியை கொண்டு செயற்கை நுண்ணறிவுப் பள்ளி தொடங்குவதற்கு ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
*பழனி முருகன் கோயிலுக்களுள் இந்துகள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு….‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு.
*குரூப்-4 பிரிவில்வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவித்தது தமிழ்நாடு தேர்வாணையம் … ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும். குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்வரி 28ம் தேதி கடைசி நாள்.
*ஞாயிற்றுக் கிழமை முதல் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் பரபரப்பாக பேசப்பபட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் சிபு சோரன் தலைநகர் ராஞ்சியில் திடீரனெ கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன் தோன்றி ஆலோசனை.. சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை முன்பு நாளை ஆஜராகும் போது கைது செய்யப்பட்டால் மனைவியை முதலமைச்சராக்க திட்டம்.
*கடந்த சனிக்கிழமை டெல்லிக்குச் சென்ற சோரன் அங்குள்ள வீ்ட்டிலிருந்து மறுநாள் திடீரென மாயமானதால் பெரும் பரப்பு உருவானது … டெல்லி வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் மற்றும் 36 லட்சம் ரொக்கததை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை சோரனை தேடி வந்தது.
*கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு பாஜக ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு … குற்றவாளிகள் என நிரூபணமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக இந்திய ஒற்றுமை பயணம் … பூர்ணியா மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகள் கேட்பு
*மகாத்மா காந்தியின் 76- வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்… நாடு முழுவதும் காந்திக்கு முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் மரியாதை.
*தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள், சிறிய அளவிலான ‘சிப்’ பொருத்தி எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’ நிறுவனம் சாதனை…. நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் நோயாளி நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாக X தளத்தில் எலான் மஸ்க் தகவல்.
*மூளையில் சிப் பொருத்தப்பட்டவர் போன், கம்பியூட்டர் உள்ளிட்ட சாதனங்களை சிந்தனை மூலமே இயக்க முடி வாய்ப்பு…. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் விளக்கம்.
*இங்கிலாந்துடன் ஏற்பட்ட தோல்வி எதிரொலி … கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் உலக அளவிலான தரவரிசையில் இந்திய அணி ஐந்தாவது இடத்திற்கு பின் தங்கியது… ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447