*வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு.
*மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி… அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி…குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி.
*திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்கீடு…. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்பிய மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு.
* ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு… வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம்.
*சேலத்தில் காலையில் தெருவில் நடந்து சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு… மகளிர் உதவித் தொகை மாதந்தேறும் வருகிறதா என்பதை பெண்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர்.
* இந்திய ஜனநாகத்மையே பிரதமர் மோடி சீரழித்துக் கொண்டிருப்பதாக சேலம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புகார்… தோல்வி பயம் காரணமாகவே நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை என்றும் கருத்து.
*தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு உள்ள அதிகாரம் போன்று புதுச்சேரி மாநில முதலமைச்சருக்கும் அதிகாரம் கிடைப்பதற்கு அதிமுக போராடும்… புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை.
*பாஜகவில் பட்டியல் அணித் தலைவராக இருந்த தடா பெரியசாமி சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியம் … ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜக சென்ன தடா பெரியசாமி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்காத்தால் அதிமுகவுக்கு தாவியதாக தகவல்.
*குன்னூர் அருகே நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராஜா வாகனத்தை சோதனையிடுவதில் அலட்சியமாக செயல்பட்டதாக புகார்… பறக்கும் படையின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட வட்டாட்சியர் கீதா சஸ்பெண்ட்.
* எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வாகன சோதனைகளை முழுமையாக மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்… தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரிக்கை. ட
*வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குளத்தில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழப்பு… குலதெயவத்தை வழிபட்டு விட்டு குளிக்க இறங்கிய போது இறப்பு.
*மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சர் கைலாஷ் கெய்க்வாட்டிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை… கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கெய்க்வாடிடம் நடந்த விசாரணையால் பரபரப்பு .
*நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் முதல் தேதிவரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது… தேர்தல் ஆணையம் உத்தரவு.
*அருணாசலம் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பாஜக வேட்டபாளகள் போட்டியின்றி தேர்வு…. பத்து பேரில் பாஜக முதல்வர் பீமா காண்டும் அடக்கம்.
*குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவது சட்டப்படி சரியாக இருக்கலாம், ஆனால் முன ஜாமீன் கேட்பது சரியானதாக இருக்காது… வழக்கு ஒன்றில் உச்ச நீதின்றம் கருத்து.
*முன்னாள் பிரதமர்கள் சரண்சில், பிவி நரசிம்மராவ், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் முர்மு… நான்கு பேரின் வாரிசுகளும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
*போரால் நொறுங்கி்கிடக்கும் காசா முனையில் உணவும் மருந்தும் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் தவிப்பு… வெளிநாட்டு விமானங்கள் உணவுப் பொட்டலங்கள் போடுமா என்று வானத்தைப் பார்க்கும் பரிதாபம் தொடருகிறது.
*வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்… வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி உயிர்பிரிந்தது.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447