*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்ட படி நாளை மறுதினம் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தயார் .. விண்கலத்தின் உட்புற சோதனைகள் நிறைவடைந்து விட்டதகாவும் இஸ்ரோ தகவல்.

*நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் பிராக்யன் ரோவர் , விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி சாதனை … ஸ்மைல் ப்ளீஸ் என்ற அடைமொழியுடன் படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

*சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க மறுத்ததை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மீண்டும் சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் மனு … சென்னை உயர் நீிதிமன்றம் உத்தரவிட்டால் தான் விசாரிக்க முடியும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவிப்பு.

*சட்ட விரோதமாக கிடைத்த தொகையை செந்தில் பாலாஜி வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளது .. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை தகவல்

*கோடநாடு கொலை வழக்கை சிபிஜ விசாரணைக்கு அனுப்பாமல் தம்மை மட்டுமே குறிவைத்துப் பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… சட்டப்பேரவையில் கோடநாடு வழக்குப் பற்றி பேசிய போது பதிலளிக்க மறுத்ததாகவும் எடப்பாடி மதுரையில் பேட்டி.

*கர்நாடக மாநிலத்தின் கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு .. விநாடிக்கு 4200 கன அடியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு 6300 கன அடியாக அதிகரிப்பு.

*தஞ்சாவூர் பசுபதி கோயில் கிராமத்தில் மழையின் போது மரம் முறிந்து விழுந்து சுஷ்மிதா என்ற மாணவி உயிரிழப்பு .. சுஷ்மிதா குடும்பத்திற்கு ரூ 5 லட்சமும் காயம் அடைந்த ராஜேஷ்வரிக்கு ரூ 3 லட்சமும் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

*உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியரை பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை … தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டம்.

*பாராதிதாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கூறி திருச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டடம் … ஆளுநர் ரவி வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக புகார்.

*கடந்த வாரம் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறை கேடு செய்ததாக புகார் .. திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர், அவருடைய மனைவி, மற்றும் மருத்துவர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரனை.

*சென்னை அடுத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக ஏக்னாபுரம் கிராம விவசாயிகள் 400 நாட்களைக் கடந்து போராட்டம் … கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்.

*நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொண் முதலமைச்சர் தண்ணீர் இல்லாமல் குறுவை நெல் பயிர் கருகுவதை பார்க்க வில்லை என்று புகார் … நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்புக் கூடத்தை புறக்கணித்தனர் விவசாயிகள்.

*கர்நாடகம் மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தரும் திட்டம் தொடக்கம் .. மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பு.

*மும்பையில் நாளை மாலை இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் .. நாளை மறுதினம் காலை கூட்டணிக்காக லோகே வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு.

*இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்து உள்ளதை மறைத்து பொய் சொல்லி வருகிறார் பிரதமர் மோடி .. லடாக்கை ஒட்டிய அக்சய் சின் பகுதியை சீனா தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளதகாவும் ராகுல் காந்தி புகார்.

*கடந்த பல ஆண்டுகளாக சமையலுக்கான சிலிண்டரை ரூ 1100-க்கு வி்ற்றுவிட்டு இப்போது விலையைக் குறைத்து இருப்பது தேர்தலுக்கான நாடகம் ..அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என்று ப.சிதம்பரம் கருத்து.

*பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பரிசுப் போருட்கள் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் பதவிப் பிரமாணத்தை மீறிய வழக்கில் செப்டம்பர் 13 -ஆம் தேதி வரை சிறைக் காவல் நீடிப்பு … இப்போதைக்கு விடுதலை ஆக முடியாது என்பதால் ஆதரவாளர்கள் கவலை.

*சிங்கப்பூரில் ஒன்பதாவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வெள்ளிக் கிழமை தேர்தல்.. தமிழரான தருமன் சண்முகநாதனுக்கு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு.

*உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா விமானம் மூலம் சென்னை திரும்பினார்… விமான நிலையத்தில் மயிலாட்டம்,ஒயிலாட்டம், கரகாட்டம் மூலம் உற்சாக வரவேற்பு.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் பிரக்ஞானந்தா .. தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த ரூ 30 லட்சத்திற்கான காசோலை அளிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *