தலைப்புச் செய்திகள் (30-10-2023)

* “அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு … கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்.

* கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது …. ஓய்வு எடுக்காமல் உழைப்பதை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் மாண்ட்வியா கருத்து.

* ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 6- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம் … சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலஜி சிறையில் உள்ளார்.

* பொன்முடி, தங்கம் தென்னரசு உட்பட்ட மூன்று அமைச்சர்களின் மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தும் போது தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் … தமிழ பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு்த் தாக்கல்.

* எர்ணாகுளம் அருகே களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு. … உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்வு.

* கேரளாவில் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்… அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த உடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்று முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு.

* பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 4 கட்ட போராட்டம் அறிவிப்பு .. டிச. 28-ம் தேதி கோட்டை முற்றுகை, நவ. 1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், நவ. 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடத்த முடிவு.

* மதுரையில் 2 புதிய மேம் பாலங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… கோரிப்பாளையம் சந்திப்பில் ₹190.40 கோடி மதிப்பீட்டிலும் மதுரை – தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ₹150.28 கோடி மதிப்பீட்டிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது.

* பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை .. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பேட்டி.

* ஆளுநர் மாளிகைக்குள் குண்டு வீசப்படவில்லை, தெருவில் தான் வீசப்பட்டது .. குண்டு வீச்சை வைத்து ஆளுநர் மாளிகை தரப்பில் அரசியல் செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் புகார்.

* சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்ததும் சென்னையில் தேவர் சிலையை அமைத்ததும் அதிமுக அரசுதான்… -பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

* முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு .. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அன்புமணி, அண்ணாமலை உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள்,பொது மக்கள் உட்பட ஏரளாமானவர்கள் பசும்பொன்னில் மரியாதை.

* தேவர் குரு பூஜையில் பங்கேற்றுவிட்டு மதுரை திரும்பும் வழியில் எடப்பாடி பழனிசாமி கார் மீது கல் மற்றும் காலணி வீசித் தாக்குதல் … எடப்பாடி ஒழிக என்று முழக்கமிட்டதால் பரபரப்பு.

* ஆளுநர் மாளிகைக்கு எதிரே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி .. குண்டு வீசுவதற்கு நிதி உதவி செய்தது யார் என்பது குறித்த தகவலை திரட்டுவதற்கு போலீஸ் முடிவு.

* தமிழ்நாட்டுக்கு காவிரியில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் விநாடிக்கு 2600 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் .. கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு.

* கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்கே போதுமானதாக இல்லையாம் .. தமிழ்நாட்டுக்கு இப்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்.

* விருதுநகர் மாவட்டம் வத்தராயிருப்பு அருகே மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து … பள்ளி முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் இறப்பு.

* நடிகர் விஜயின் லியோ பட வெற்றி விழாவை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நவம்பர் முதல் தேதி நடத்தலாம் .. நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி.

* நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள சுற்றுலா விடுதிகளை அகற்றக் கோரும் வழக்கு .. சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

* சென்னை அடுத்த பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டபோது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு .. அமர பிரசாத் என்பவர் உட்பட பாஜக நிர்வாகிகள் 4 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றது போலீஸ்.

* ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியாவுக்கு ஐாமீன் கொடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு … மது பான கொள்கையில முறைகேடு செய்துள்ள வழக்கை எட்டு மாதங்களுக்குள் முடிக்குமாறு உத்தரவு.

* தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி எம.பி.பிரபாகர் ரெட்டிக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்திக்குத்து … வாக்கு சேகரிப்பின் போது கை குலுக்குவது போன்று வந்து கத்தியால் குத்திய நபர் சுற்றிவளைப்பு.

* ஆந்திராவில் விஜயநகரம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு .. சிக்னலை கவனிக்காமல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தகவல்.

* மாராட்டியத்தில் மரத்தா சமூக மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோாி நடைபெறும் போராட்டம் தீவிரமடைகிறது … பீட் மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வீட்டுக்கு தீ வைப்பு.

* காசா முனைக்குள் புகுந்து கடுமையான தரை வழித் தாக்குதலை நடத்துவதற்கு டாங்கிகள் செல்ல பாதையை சீரமைக்கிறது இஸ்ரேல் … தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலால் காசாவில் பல லட்சம் மக்கள் குடி தண்ணீர் கூட கிடைக்காமல் அவதி.

* இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்தி காசா மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உதவி செய்ய வேண்டும் … ஐ நா பொதுச் செயலாளர் குட்ரோஸ் வேண்டுகோள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *