*தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு .. ஐந்து மாநில தேர்தலும் முடிவடைந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை
*ஐதராபாத்தில் ஜுப்ளி கில்ஸ் வாக்குச்சாவடியில் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் வேட்பாளருமான அசாருதீன் வாக்களிப்பு .. தெலுங்கு திரை பிரபலங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களும் வரிசையில் காத்திருந்த ஓட்டுப் போட்டனர்.
*சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கு .. சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மூன்றாவது முறை ஆஜராகி ஐந்து மணி நேரம் விளக்கம்.
*முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு … மறு உத்தரவு வரும் வரை அதிமுக கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதில்லை என்று பன்னீர் தரப்பு உத்தரவாதம்.
*சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் வகுக்கப்பட்டும் பலனில்லை.. சீமைக் கருவேல மரங்கள் இல்லாத ஒரு கிராமததையாவது காட்ட முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி.
*வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதி அன்று புயலாக மாறுகிறது … தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 4 ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல்.
*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் … கடலூர்,விழுப்புரம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
*சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு … மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் , மேயர் உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் விளக்கம்.
*சாதாரண மழைக்கே சென்னை முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … மக்களின் துயர் துடைக்க அதிமுக தொண்டர்கள் உதவுமாறு வேண்டுகோள்.
*சென்னையில் காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 சென்டி மீட்டர் மழை பதிவு .. இந்த பருவத்தில் பதிவான அதிக மழை அளவு என்று தகவல்.
*சென்னைக்கு குடி நீர் வழங்கும் அனைத்தும் ஏரிகளும் நிரம்பி வழிகிறது .. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாறில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி நீர் திறப்பு.
*புறநகரில் பெய்த மழை மற்றும் செம்பராம்பாக்கம் ஏரி நீரால் அடையாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது … தண்ணீர் மேலும் அதிகமானால் தாழ்வான இடங்களுக்கும் புகுந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சம்.
*புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கடலூர், மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை … படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்தி வைப்பு.
*சென்னை மாநகரில் நவம்பர் மாதத்தில் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 639 பேர் மீது நடவடிக்கை .. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டு உள்ளதாக காவல் துறை தகவல்.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த முழுமையாக குணம் பெற்று விரைவாக வீடு திரும்ப வேண்டும் ..எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலை தளத்தில் பதிவு.
*விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு குடிபோதையில் வந்த நான்கு மாணவர்கள் ஆசிரியர்கள் உடன் ரகளை … தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி இளைய தலைமுறையை காப்பாற்றுமாறு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.
*கோயம்புத்தூில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மூன்று நாட்களில் துப்புத் துலக்கியது போலீஸ்.. தருமபுரியில் கொள்ளையன் வீட்டில் இருந்து 200 சவரன் நகைகளும் மீட்பு …
*அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார் .. கனக்ட்கட் மாகாணத்தில் உள்ள வீட்டில் 100 வது வயதில் உயிர் பிரிந்தது.
*இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் மட்டும் நீடிப்பு .. மீண்டும் நாளை தாக்குதல் ஆரம்பமானால் காசா முனையில் வசிக்கும் பல லடசம் பேருக்கு ஆபத்து.
*கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் சண்டை காரணமாக காசாவில் இருந்து 18 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தகவல்.. காசா முனைக்கு அனுப்பட்ட *உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போதுமானதாக இல்லை என்றும் கருத்து.
*டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு உகண்டா அணி முதன் முறையாக தேர்வு .. தகுதிச் சுற்று ஆட்டத்தில் ருவண்டாவை வீழ்த்திய உகண்டாவுக்கு உலகக்கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்பு.
*உலகக் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது … இந்தியா, அமெரிக்கா உட்பட 20 அணிகள் தகுதிச் சுற்றில் தோ்வு.