* மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கமால் உள்ள ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு … மசோதாக்கள் மற்றும் அரசாணைகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்திடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தல்.
* மின் கட்டணத்தை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று செல்போன் வழியே வரும் தகவல் போலியானது என்று மின்வாரியம் எச்சரிக்கை .. இணைய லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள்.
* சென்னையில் கடற்கரை,செங்கற்பட்டு தடத்தில் 53 புறநகர் ரயில்களின் சேவை இன்று காலை 10.45 மிணி முதல் முதல் மாலை ரத்து செய்யப்பட்டிருந்தது … பரங்கிமலை நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் சேவையை ரத்து செய்ததாக ரயில்வே விளக்கம்.
* வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆருத்ரா, ஹிஜாப், ஐ.எப்.எஸ்.ஆகிய நிதி நிறுவன நிர்வாகிகளை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை .. சர்வதேச போலீஸ் உதவியை நாடியது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீஸ்.
* ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை .. நீட் தேர்வு அமலில் இருப்பதால் தன் மகனின் மருத்துவக் கனவு பறிபோகும் என்பதால் குண்டு வீசியதாக வாக்குமூலம்.
* சிறையில் இருந்த போது எந்த அமைப்பினருடன் தொடாபு எற்படவில்லை… சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளவர்களை விடுவிக்குமாறும் கருக்கா வினோத் போலீசிடம் வலியுறுத்தல்.
* பாஜக அலுவலுகம் மீது ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் .. வினோத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை சுட்டிக் காட்டி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் போலீஸ் மனு.
* நடிகை கவுதமி கொடுத்த நில மோசடி புகாரின் போலீ்ஸ் நடவடிக்கை .. காரைக்குடியில் உள்ள அழகப்பன் என்ற பாஜக பிரமுகர் வீட்டில் போலீஸ் விசாரணை.
* முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பறறி பேசிய மோடி பிரதமரான பிறகு மாநிலங்களிள் உரிமைகளை பறிப்பதாக மு.க.ஸ்டாலின் புகார் … இந்தியாவுக்காக பேசுகிறேன் என்ற தலைப்பில மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மூன்றாவது வீடியோவில் மாநில சுயாட்சியின் அவசியம் பற்றி விளக்கம்.
* பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்த கனிம வள ஏலத்தின் போது திமுகவினர் புகுந்து தாக்குதல் .. அதிகார மமதையில் திமுகவினர் அனைவரையும் மிரட்டி அரஜகத்தில் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
* காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் ஹஸ்தர் தலைமையில் நவம்பர் 3 ஆம் தேதி கூடுகிறது … நான்கு மாநில அதிகாரிகளுக்கும் அழைப்பு.
* தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு .. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கலந்தாய்வு.
* சென்னை பல்லாவரம் அருகே பிரமாண்டமான மென்பொருள் பூங்கா முதலமைச்சரால் திறந்து வைப்பு … தமிழ்நாட்டில் தொழில் புரட்சி நடந்து வருவதாக ஸ்டாலின் பெருமிதம்.
* தமிழ்நாடடில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராததால் ஏலம் விட காவல் துறை நடவடிக்கை .. உயர்நீதமன்ற மதுரைக் கிளையில் டிஜிபி தரப்பில் தகவல்.
* ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் .. இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு.
* செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட பத்து தலைவர்களுக்கு ஆப்பில் நிறுவனம் தகவல் .. சீதாராம் எச்சூரி, அகிலேஷ் யாதவ்,பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்படுவதகா புகார்.
* செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் .. காங்கிரஸ் நிர்வாகிகளின் செல்போன்களை ஹேக் செய்யவும் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.
* ஒட்டுக்கேட்பு புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு .. மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல்.
* முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திரா உயர்நீதிமன்றம்.. ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்குப் பிறகு விடுதலை ஆன சந்திரபாபுவுக்கு தெலுங்கு தேசம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
* சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மரியாதை … தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டத்தையும் கண்டு களித்தார் மோடி.
* அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை ஒழுங்குப்படுத்துவது தங்களின் வேலை இல்லை என்று தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் விளக்கம் .. இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு தடை விதிக்கக் கோறும் பொது நல வழக்கில் பதில் மனு தாக்கல்.
* டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் நாளை மறுதினம் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருப்பதால் பரபரப்பு .. இதே வழக்கில் கடந்த ஏப்ரலில் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் கெஜ்ரிவால் .
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் நினைவிடத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி , ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி .. நாட்டின் பல இடங்களில் சிலலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் மரியாதை.
* எர்ணாகுளம் களமசேரி குண்டு வெடிப்பு தொடர்பாக மத பிரிவினையைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக புகார் .. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் மீது கொச்சி மாநகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
* மும்பை மாநகரில் 60 ஆண்டுகளாக வாடகைக் கார்களாக இயங்கி வந்த பிரிமியர் பத்மினியின் கடைசி காரும் தமது சேவையை முடித்துக் கொண்டது… கடைசியாக கடந்த 2003 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கார் 20 ஆண்டு ஆனதால் விடை பெற்றதால் பத்மினி சாகப்தம் முடிவுக்கு வந்தது.
* ஹமாசுக்கு எதரான பேரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு திட்டவட்டம் … போரை நிறுத்த வேணடும் என்று ஜநாவில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க மறுப்பு.
* கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பாலன் டி ஓர் விருதை வென்றார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி .. எட்டாவது முறையாக பாலன் டி ஓர் விருதை பெற்று மெஸ்ஸி சாதனை.
* தாய்லாந்து நாட்டுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு விசா தேவையில்லை .. இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தங்கலாம் என்று அறிவிப்பு.
* சென்னை நேரு உள் விளைாட்டு அரங்கில் நாளை லியோ படத்தின் வெற்றி விழா .. டிக்கெட் இல்லாதவர்களக்கு அனுமதி இல்லை என கண்டிப்பு.