தலைப்புச் செய்திகள் (31-12-2023)

*பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பு… ஓரிரு நாளில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்.

*பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பு வெளியாகததால் போதிய வாழ்வாதரம் இ்ல்லாதவர்களும் கரும்பு சாகுபடி செய்து உள்ள விவசாயிகளும் கவலையில் உள்ளனர் ..பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பை உடனே வெளியிடுமாறு அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

*செங்கடலில் ஹவுதி போராளிகளின் நான்கு படகுகள் மீது அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர்களால் குண்டு வீசித் தாக்குதல் .. மூன்று படகுகள் நடுக்கடலில் மூழ்கியதால் அதில் இருந்தவர்கள் இறப்பு, ஒரு படகு தப்பிவிட்டதாக தகவல்.

*ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி போராளிகள் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது… இந்த சூழலில் கடந்த வாரம் அரபிக் கடலில் இந்தியக் கப்பல்கள் தாக்கப்பட்டது யாரால் என்றுத் தெரியவில்லை.

*அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக இந்திய கடற்படை அறிக்கை … இந்தியாவுக்கு வரும் வணிகக் கப்பல்கள் ட்ரோன் மூலம் தாக்குதலுக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை.


*உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா கடந்த இரண்டு நாட்களாக மிகவும் தீவிரப்படுத்தியதில் 24 பேர் இறப்பு … தொடர் குண்டு வீச்சால் உக்ரைனின் பல இடங்களில் சேதம்.

*சாதனைகளை தொடர்ந்து படைக்க ஆங்கில புத்தாண்டை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தி .. புதிய ஆண்டை வரவேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து.

*புத்தாண்டு கொண்டாடங்களின் போது அசம்பாவிதங்களை தடுக்க போதிய ஒத்துழைப்பு தருமாறு பொது மக்களுக்கு காவல் துறை வேண்டுகோள் … மது அருந்திவிட்டும் கவனக்குறைவாகவும் அதி வேகமாகவும் வாகனங்களை ஓட்டுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.

*சனி,ஞாயிறு மற்றும் புத்தாண்டு தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலா மையங்களில் அதிக அளவில் கூட்டம் .. கன்னியாகுமரி, உதகை, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு பயணிகள் வரத்து அதிகரிப்பு.

*சென்னையில் இருந்து தென்மாவடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுவதால் கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்து பயணம் செய் வதற்கு முன்பதிவு செய்து உள்ளவர்களுக்கு மீதிக் கட்டணம் திருப்பித் தரப்படும் … போக்குவரத்துக் கழகங்கள் அறிவிப்பு.

*ஆருத்ரா தரிசனத்தின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்கதர்கள் ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்ததை எதிர்த்து வழக்குத் தொடரப்படும்.. அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.

*சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-க்கு அதிகாலை 1.30 மணிக்கு 290 பேருடன் புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் திடீர் இயந்திர கோளாறு காரணமாக ரத்து….பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாமல் சென்னையில் தவிப்பு.

*புதுச்சேரி மாநிலத்தில பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000… தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு.

*புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், இன்று மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி வரையில் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை … புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்ட நகரத்தில் இருந்து கிழக்கு நோக்கி கடற்கரைக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் தற்காலிகமாக மூடல்..

*புதுச்சேரி கடற்கரையில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள், இரண்டு சிறுவர்கள் மாயம் .. நெல்லித் தோப்பைச் சேர்ந்த நான்கு பேரும் கடலில் மூழ்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி.

*ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவ நடவடிக்கை… 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு ஆரம்பம்.

*மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தமது விருதுகளை டெல்லியில் பிரதமர் வீட்டுக்கு செல்லும் சாலைகளில் நேற்று விட்டு விட்டுச் சென்றது பற்றி ராகுல் காந்தி கருத்து … பதக்கங்களை விட சுயமரியாதையை முக்கியமானதாக கருதும் வீராங்கனைகளின் கண்ணீரை விட உங்களுக்கு கிடைக்கும் அரசியல் பலன்கள்தான் முக்கியமானதா என்று பிரதமருக்கு கேள்வி.

*ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்குத் தொடர்பான விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை ஏழாவது முறையாக சம்மன் .. இந்த முறையும் சோரன் ஆஜராகாவிட்டால் என்ன நடக்கும் என்பதை அறிய அனைத்துத் தரப்பும் ஆர்வம்.

*பசிபிக் கடலில் உள்ள நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது.. ஆக்லாந்து, வெலிங்டன் நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்.

*இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு … மேற்கு பபுவா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

*பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்திற்காக படக்குழு வடிவமைத்து உள்ள புதிய வகை துப்பாக்கியின் படம் வெளியீடு .. கல்கி 2898 படத்தில் கமல்காசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

*நடிகர் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் வடிவேலு வராதது பற்றி வலைதள வாசிகள் கருத்துப் பரிமாற்றம் … இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2011 சட்ட மன்றத் தேர்தலில் விஜயகாந்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் வடிவேலு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *