*பீகார் மாநிலத்தில் நிதீ்ஷ்குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பு …. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைப்பு.
*பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பாஜகவை சேர்ந்த சுமார்ட் சவுத்ரி,விஜய் சின்கா இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்பு… மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து புதிய அரசு உருவானது.
*கடந்த 2005- ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல் முறையாக நிதீ்ஷ்குமார் பீகார் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்… கடந்த19 ஆண்டுகளில் பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் இன்று பதவி ஏற்றது ஒன்பதாவது முறை ஆகும்.
*பீகார் அரசியலை ஆட்டிப்படைக்கும் நிதீஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சி தான் … 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபையில் வெறும் 45 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துக் கொண்டு அணி மாறி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் நிதீஷ்.
*கடந்த 2020 அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து 7 -வது முறை முதல் அமைச்சராக பதவி ஏற்றவர் நிதீ்ஷ் .. திடீரென 2022- ஆம் ஆண்டில் பாஜக உறவை முறித்துக் கொண்டு லாலுவின் ஆர்.ஜே.டி. யுடன் கூட்டணி சேர்ந்து முதல்வர் பதவியை ஏற்ற நிதீஷ் இப்போது மீ்ண்டும் பாஜகவுடன் சேர்ந்து முதல்வராக பதவி ஏற்பு.
*முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழு சென்னையில் ஆலோசனை … நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கொடுத்ததாக தகவல்.
*போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் கொடுத்ததாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி திட்டவட்ட மறுப்பு … காங்கிரஸ் தங்களிடம் விருப்பப் பட்டியலை கொடுக்கவில்லை என்று டி.ஆர்.பாலுவும் விளக்கம்.
*வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரீட்டை சென்றடைந்தார் …. விமான நிலையத்தில் இந்திய தூதர் உள்ளளிட்டோர் வரவேற்பு.
*முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருப்பதால் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3- ஆம் தேதி சென்னையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேரணி … திமுகவின் அனைத்து அணிகளும் பங்கேற்க அழைப்பு.
*தமிழ்நாடு அரசின் மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு… பனை மரத்தை வெட்டியவர் மீது வழக்குப் பதியப்படுவது இதுவே முதன்
*தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி – கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… புளியங்குடியை சேர்ந்தவர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பியபோது விபத்து.
*டாஸ்மாக் மதுபான கடைகளில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து வகையான பீர்களின் விலையும் பாட்டிலுக்கு ரூ 10 உயருகிறது … பிராந்தி,விஸ்கி, ரம் போன்ற மற்ற மதுபானங்களின் விலையும் லிட்டருக்கு ரூ 100 அதிகரிக்கும் என்று தகவல்.
*ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து புறப்பட்டது … ஆளும் திரினாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பால் பரபரப்பு.
*பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் வைக்கப்பட்டு உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற மோனலிசா ஓவியத்தின் மீது சூப் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வீச்சு .. அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுக் கேட்கும் அமைப்பினர் போரட்டம்.
*ஐதராபாத்தி்ல் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்திய அணி … ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447