தலைப்புச் செய்திகள் (13-08-2023)

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை… சென்னைக்கு அழைத்து வரப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை.

*அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த வாரத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.. குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஜாமீன் கிடைத்து விடும் என்று நம்பிக்கை.

*வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட்பட 6 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு.. சுதந்திர தினத்தன்று வழங்கி கவுரவிக்க நடவடிக்கை.

*சட்டமன்றத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியது பற்றி நிர்மலா சிதாராமன் சென்னது உண்மைதான்.. சட்டமன்றத்தில் அன்று இருந்த தாம் அனைத்தையும் நேரில் பார்த்ததாக எடப்பாடி பழனிசாமி பதில்.

*சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை புடவையை பிடித்து இழுத்து கொடுமைப் படுத்திய நாள் ஜனநாயகத்தின் கருப்பு நாள்.. சட்ட சபையில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்து தவறு என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

*நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி , நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் திமுக பற்றி பேசியதற்கு திருச்சி சிவா எம்.பி. பதில்.. மு.க.ஸ்டாலின் முயற்சியால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் அஞ்சி திமுகவை விமர்சிப்பதாக புகார்.

*அயராத உழைப்பு, கடுமையான பயிற்சி ஆகியவற்றால் கிடைத்த வெறறி.. ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன் போட்டி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..

*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் வென்ற இந்திய அணிக்கு ரூ ஒரு கோடி பத்து லட்சம் பரிசு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

*மூன்று குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் குறித்து நிபணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் … இந்தியி குற்ளவியல் சட்ட அமைப்பை பாஜக அரசு சீர்குலைப்பதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு .

*தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அஜித்பவாருடன் ரகசிய சந்திப்பு … புனேவில் நடைபெற்ற சந்திப்பால் மராட்டிய அரசியலில் பரபரப்பு .

*சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு.. தலை நகர் டெல்லியில் கண்காணிப்பு தீவிரம்.

*டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஆசிரியர்கள், ஊராட்சித் தலைவர்கள்,செவிலியர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு.. நாடு முழுவதும் இருந்து 1800 பேருக்கு அழைப்பு.

*தனது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் தேசியக் கொடியை வைக்குமாறு அழைப்பு,, சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறும் வேண்டுகோள்.

*சென்னை அடுத்த பெருங்குடியை சேர்ந்த ரமேஷ் மணி என்ற வழக்கறிஞர் மீது துரைப்பாக்கம் போலிசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு.. போலி ஆவணங்களகை் கொடுத்து பட்டியல் இனத்தவர் என்று சாதி சான்றிதழ் பெற்று சட்டம் படித்ததாக புகார்.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆணையர் ரகுபதி தலைமையிலான குழு நெல்லையில் முகாம்.. நான்கு நேரியில் பட்டியல் சமூக மாணவன் மற்ற மாணவர்களால் வெட்டப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை.

*நாங்குநேரியில் மாணவன் மற்றும் சகோதரியை வெட்டும் சம்பவத்தை பார்த்த அதிர்சியில் உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண உதவித் தொகை ரூ.3 லட்சம்…

*சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் கிருஷ்ணன் இல்லத்திற்கு சென்று உதவித்தொகை வழங்கி ஆறுதல்.

*சென்னை மாநகராட்சியில் காலியான உள்ள இரண்டு வார்டுகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்…122 மற்றும் 165 வது வார்டுக்கு விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை.

*ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் விழா களை கட்டியது .. ஆங்காங்கு தீச்சட்டி சுமந்தும் கஞ்சி கலையங்களை ஏந்தியும் பெண்கள் நேர்த்திக் கடன்.

* நடிகர் கமலஹாசன் திரை உலகத்துக்கு வந்து 64 ஆண்டுகள் நிறைவு..எஞ்சிய நாளும் என்னுடைய மக்களுக்காகவே என்று டுவிட்.

* பாகிஸ்தானின் குவட்டா துறைமுகத்தில் சீனா பொறியாளர்கள் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு… பாலுசிஸ்தான் விடுதலைப்படை நடத்திய தாக்குதலில் உயரிழப்பு எதுவுமில்லை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *