கணவர் கறுப்பாக இருந்ததால் அவமானப்படுத்திய மனைவி… விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்…

ஆகஸ்டு-10

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும்.

ராதா தன் கணவர் ரமேஷ்குமார் மீது காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். ரமேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ராதா தன் கணவரை பிரிந்து தனியாக வசித்தார். எனவே ரமேஷ் குமார் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து ரமேஷ் குமார் கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘நான் கறுப்பாக இருப்பதால் என் மனைவி என்னை வெறுக்கிறார். என் நிறத்தை குறிப்பிட்டு பலமுறை திட்டியுள்ளார். நான் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், வேறொரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு உள்ளதாகவும் பொய் புகார் கொடுத்துள்ளார்’ என குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றம், கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ‘‘ வழக்கு விசாரணையில், கணவர் கறுப்பாக இருந்ததால் மனைவி அவரை அவமானப்படுத்தியது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரை நிற வெறியோடு ஒடுக்குவது கடுமையான குற்றம். இந்த கொடுமையை ஏற்க முடியாது. கணவரை பிரிந்து செல்வதற்கு தெரிவித்த காரணங்கள் நம்பும்படியாக இல்லை. எனவே கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதுடன், கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *