ஜுலை, 22-
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இதனை செய்து காட்டியிருக்கிறார் ராஜேந்திர குடா என்பவர். இவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல.ராஜஸ்தான் மாநில அமைச்சார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
அந்த மாநில சட்டசபையில் நேற்று. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற பிரச்சினை எழுந்தது. அப்போது ராஜேந்தி குடா,”மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசுவதற்கு முன்பு நமது அரசு ராஜஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன” என்று பேசியது போதும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். முதலமைச்சர் அசோக் கேலாட், அமைச்சர்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் , அமைச்சர் ராஜேந்தி குடா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்ல ஆரம்பித்தனர்.
இன்னும் நான்கு மாதங்களில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக ஓட்டை, உடைசல்களை எல்லாம் அடைத்துக் கொண்டிருக்கும் கேலாட்டுக்கு குடாவின் பேச்சு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
வேறு என்ன செய்வது, அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார் முதலமைச்சர்.
இதைதான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்கள்.
000