எம்.எல்.ஏ. க்கே இப்படி ஒரு நிலையா….. மதிமுக எம்.எல்.ஏவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன!

ஜுன் 26,

முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் தனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக மதுரை மாமன்ற கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 19 -ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி கோரிக்கை விடுத்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது..

தனது தொகுதிக்கான பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் ,சாலை வசதிகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் எடுத்து கூறிய பின்னரும், பாதாள சாக்கடை பணிகள் பாதியிலே கிடப்பில் போடப்பட்டுள்ளன, இது தொடர்பாக  பலமுறை தொடர்பு கொண்டு பணிகளை விரைவுபடுத்த கூறிய நிலையிலும் கூட ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது. தொகுதிக்குள் செல்லும்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடக்கூடிய நிலை உள்ளது. எனவே இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கக் கூடாது,

மாநகராட்சியில் அதிகாரிகள் குறைவாக உள்ளதன் காரணமாக இது போன்ற பணிகளை செயல்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது. எனவே முதலமைச்சரிடமும் , மதிமுக தலைவர் வைகோ விடமும்  தனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளது.

இவ்வாறு பூமிநாதன் பேசினாா.

இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதன்: தனது தொகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியிலயே கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தொகுதி பக்கம் செல்லமுடியவில்லை . இதனால் கூட்டத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *