OYO செய்த அதிரடி மாற்றம் … திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அறை கிடைப்பதில் சிக்கல்.

O

ஜனவரி -06.
திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு இனி அறைகள் கொடுப்பதற்கு இல்லை என்று OYO என்று தெரிவித்து உள்ளது. OYO இந்தியாவின் முன்னணி ஓட்டல் முன் பதிவு தளமாகும்.

OYO -க்கு இந்தியாவில் சிறு நகரங்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை அனைத்து நகரங்களிலும் பல ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இந்த தளத்தைப் பயன்படுத்தி ஏராளமானவர்கள் அறைகளை பதிவு செய்து தங்கி வருகின்றனர். அவரவர் வசதிக்கு ஏற்ற வாடகைகளில் அறைகள் கிடைக்கின்றன.

இந்த நிலையில் OYO , திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகளுக்கு இனி அறைகள் இல்லை என்ற முடிவை எடுத்து உள்ளது. இந்த உத்தரவை உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் புத்தாண்டு முதல் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. பல்வேறு உள்ளூர் அமைப்புகள் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் உறவு வைத்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருவதை தடுப்பதற்கு இந்த ஏற்பாடாம். ஆன் லைனில் அறையை பதிவு செய்துவிட்டு உடன் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டுப் போகும் போது அந்தப் பெண் தன்னுடைய மனைவி என்பதற்கான ஆவணங்களைக் காட்ட வேண்டும். மனைவி என்பதை நிரூ பிக்காவிட்டால் உள்ளே அனுப்ப மாட்டார்களாம்.

மீரட்டில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப் படுத்துவதற்கு OYO முடிவு செய்து உள்ளது.
காதல் ஜோடிகள் என்றாலும் சரி, இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சொன்னாலும் சரி அறை கிடைக்காதாம்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *