ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய முகங்களாக இருந்த விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக் ஆகியோர் பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்கள்.இந்த நான்கு ஹீரோக்களும், தங்கள் மகன்களை சினிமாவில் இறக்கி விட்டனர். சொல்லி வைத்த மாதிரி நான்கு வாரிசுகளில் ஒருவர் கூட தேறவில்லை.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.படம் ஓடவில்லை. பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்தார்.அதுவும் வெற்றி பெறவில்லை. இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

“வால்டர்”, “ரேக்ளா” ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இந்தபடத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் நடக்கும் கதை.பெயரிப்படாமலேயே படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்தது.

விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு,படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.மலைவாசியை போன்ற தலைமுடியுடன் சண்முகபாண்டியன், வித்தியாசமான தோற்றத்தில் போஸ்டரில் காட்சி அளிக்கிறார்.

படை தலைவன் வெற்றி பெறுவான் என விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். சண்முகபாண்டியன், சகாப்தம் படைப்பாரா?

-பாரதி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *