கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 : பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
மே.1 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பரப்புரையானது மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிடுகிறார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமையகத்தில்Continue Reading