மே.26 சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகின்றனர். இதில்,Continue Reading

மே.26 தமிழக முதலமைச்சர் 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று ஜப்பான் சென்றடைந்தார். சென்னையில் 2024 ஜனவரியில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்றுContinue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

மே.24 நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வை தமிழ் மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று தென்காசி இளைஞர் சுப்புராஜ், அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்குContinue Reading

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading

மே.23 தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், சுற்றுச்சூழலை கெடுத்து, மிகக் குறைந்த அளவில் மட்டும் மின்சாரத்தை வழங்கும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழகத்தில் அனுமதிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19-ஆம்Continue Reading

மே.22 கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு கோடை சீசனில், பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன்Continue Reading

மே.22 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுContinue Reading

மே.21 வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்Continue Reading

மே.20 தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன்,Continue Reading