ஏப்ரல்.22 தமிழகத்தில் ரமலான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்று, ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஈகைத்திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான்Continue Reading

ஏப்ரல்.22 தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குContinue Reading

ஏப்ரல்.21 தமிழகத்தில் நடைபெற்றுவந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனை, மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4216 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். அதில் 37,798 பேர் தனித்தேர்வர்கள். 13,151 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 பேர் மூன்றாம் பாலினத்தவர். 2,640 பேர் சிறைContinue Reading

ஏப்ரல்.19 தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மேலும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும்Continue Reading

ஏப்ரல்.19 கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து  நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான  பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,  பிரத்யேக கல்லீரல் செயல்Continue Reading

ஏப்ரல்.19 தமிழகத்தில் மின்சார நிலைக்கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஏப்.20) மாநிலம் தழுவிய கதவைடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக போசியா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் டான்சியா தலைவர் மாரியப்பன்,Continue Reading

ஏப்ரல்.15 தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வரும் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இரவு ஊரடங்கு, முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட கட்டுபாடுகளை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வருகின்றContinue Reading

ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading