ஆகஸ்டு,20 – திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள் உலா வருகின்றன. அவை அடிக்கடி அலிபிரி மலைப்பாதைக்குள் நுழைந்து வெங்கடேசபெருமானை தரிசிக்க செல்லும் பக்தர்களை அச்சுறுத்துகிறது. சில தினங்களுக்கு முன் மலைப்பாதை மார்க்கமாக பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.இதனால் திருப்பதி கோயில் நிர்வாகம் மலைஏறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கி வருகிறது.மலைஏறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறுத்தைளைContinue Reading

ஆகஸ்டு,19- 80 மக்களவை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.மட்டுமே இருக்கிறார்.அவர் ,சோனியா காந்தி.பாஜக, சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்இடத்தில் 5 சதவீத வாக்குகளோடு அந்த மாநிலத்தில் நோஞ்சான் குழந்தையாக காங்கிரஸ் உள்ளது. உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பிரிஜ்லால் காப்ரி பதவி வகித்து வந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மாநிலங்கள் தோறும் தலைவர்களை மாற்றி வரும்Continue Reading

ஆகஸ்டு, 17- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துContinue Reading

ஆகஸ்டு,17- திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க மலைப்பாதை மார்க்கத்தில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இங்கு உலவும் சிறுத்தைகள் பக்தர்களை தாக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.. மலைப்பாதையில் பெற்றோருடன் சாமி தரிதனம் செய்வதற்காக சென்ற 6 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தையடுத்து, மலைப்பாதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலைContinue Reading

ஆகஸ்டு,16- தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு, வில்லன் நடிகர்களே ஆதி முதல்ஆணி வேராக இருந்து வந்துள்ளனர்.எம்.ஜி.ஆருக்கு நம்பியார், ரஜினிக்கு ரகுவரன் என பொருத்தி,படத்தை வெற்றி அடையச்செய்தனர், இயக்குநர்கள்.வில்லன்களின் குரூர முகத்தை கிழித்து, நீதியை நிலைநாட்டியதால் சினிமா ஹீரோக்கள் நிஜமான நாயகன்களாக வலம் வந்தனர். பேட்ட, மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு வில்லன் விஜய்சேதுபதி .பெரும் காரணியாக இருந்தார். இதனால், நாயகனை முடிவு செய்யும் டைரக்டர்கள், யாரை வில்லனாக படத்துக்குள்Continue Reading

ஆகஸ்டு,16- நந்தா- பிதாமகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் ‘வணங்கான்’படத்துக்காக இணைந்தனர். சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்களில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. முட்டல்-மோதல் விரிந்து பரந்ததால், படத்தில் இருந்து சூர்யா விலகிகொண்டார்.   ‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்றContinue Reading

ஆகஸ்டு, 15- நாட்டின் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது இது 10- வது முறையாகும். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோடி பேசியதாவது .. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின்Continue Reading

-ஆகஸ்டு, 15- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்–2 மாணவர் சின்னத்துரையும், அவரதுதங்கை சந்திரா செல்வியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொடுர தாக்குதலில் ஈடுபட்டதாக பிளஸ்–2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.சாதிய வன்மத்தால் நிகழ்ந்த இந்த குரூர சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல தரப்பினரும்Continue Reading

ஆகஸ்டு, 14- ‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவைContinue Reading

ஆகஸ்டு,14- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருடைய சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லஷ்மி ஆகியோர் தான் மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அறிக்கையில் அமலாக்கத்துறை மேலும் கூறியிருப்பதாவது.. அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை . அவரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. இந்த நிலையில் அசோக் குமார் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.Continue Reading